Thursday, December 11, 2008

கேட்பதாக இல்லை இனி....

கேட்பதாக இல்லை இனி....
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.

வேறு என்ன இருக்கு...?

இஸ்லாமிய அடையாளத்தோடு
நாட்டிலே நாடமாட ஊறு ஏற்பட்டதே...
உலகரங்கமே பார்த்ததே நாட்டின்
நாடாளும் சபை கண் விழித்திருந்ததை...!

உங்கள் ஊரரியுமே,இன்றும்
நம் ஷரீஅத்தின் சுக வாழ்வை
சுவைக்கும் உரிமையை பெற்று தந்தவர்
மராட்டிய மாவீரர் பனாத்வாலா என்பதை...!

அப்புறம் ஏதாவது...?
ஆம்...இதோ ..!
அவசர ஊர்தி எனும் ஆம்புலன்ஸ் சேவையை
அறிமுகம் செய்து காட்டியது யார்...?
தஞ்சை மாவட்டத்து தாய்ச் சபை
சொந்தங்கள் தானே...!

அதற்க்கு ஒன்றும் நாங்கள் சலைத்தவர்கள்
அல்ல என்று
அன்று மறுமொழி பகன்ற இராமநாதபுரம் மாவட்ட
தாய்ச் சபையின் ஆம்புலன்ஸை மறக்க முடியுமா...?

ஏன் இதெல்லாம் இப்போ..?
பூனை கண் மூடினால் உலகம் இருட்டாம்...!
நாங்கள் கண்ணயர்ந்தால் குருடாம்?

நாட்டிற்க்கு புதிய சட்டம்...
திருமணத்தை பதியுங்கள் என்று...!
இல்லை..இல்லை..அது பதியாதவர்களுக்கு...
நாங்கள் பதிவை பல்லாண்டாக செய்து
காட்டிக் கொண்டிருப்பவர்கள்.

எங்களின் பதிவை
சட்டத்தின் பட்டமாக்குங்கள்!
என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் முழக்கம்
தெருவில் அல்ல...நாட்டின் ஆட்சி மன்றத்தில்...!

வேற புதுசா...?
மதரசாக்களில் தீவிரவாதமென்று
அபாயக்குரல் பாராளுமன்ற்தில்...
எழுந்தது சமுதாயக்குரல்..,

அப்படியானால் நான்...?
அங்கிருந்து வந்தவன் தானே நானும்...?
அறநெறிகள் போதிக்கப்பட்டுத்தானே வளர்க்கப்பட்டேண்.
மதரஸா என்பது ஒழுக்க நெறிக்கூடம்
இது பேராசிரியரின் சொல் வீச்சு...!

அடுத்து என்ன..?
சன்மார்க்க மேதைகளான உலமாக்களின்
கோரிக்கை பேராசிரியர் முனீருல் மில்லத்திடம்...
மதரஸாக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த
சிறப்பு விலைசிலிண்டர் தளர்த்தப்பட்டு விட்டது
திருப்பித்தர ஆவண செய்ய வேண்டும்!

அடுத்த சில வாரங்களில்
அந்த கோரிக்ககை பேராசிரியரால் பாராளுமன்றத்தில்,
எதையும் உரிய இடத்தில் சொல்லி செய்வதுதானே
முஸ்லிம் லீகின் பண்னெடுங்கால பண்பு!

இன்னும் வேண்டுமா..?
ஆம்...இருக்கிரது
இன்னும் பல நூறாண்டுகளுக்குப் பின்
சமுதாயத்திற்க்கு உள்ள
தேவைகளும்,சேவைகளும்,மணிவிழா மாநாட்டின்
பிரகடனத்தில் மணி மணியாய் இருக்கிரது..!

சிலதை சொல்ல முடியும்!
சிலதை சொல்ல முடியாது...!
ஆனால்...!ஒன்று-
சொல்லிக் காட்டத் தேவையில்லை
என்று சொல்லி வளர்த்த
எங்கள் தலைவர்களின் சொல்லை
கேட்பதாக இல்லை...!இனி!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in

Thursday, December 4, 2008

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.


இந்தியாவிற்க்கு ஏற்ப்பட்ட
தலை குனிவு...!
உலக வரலாற்றிர்க்கு ஒரு
கருப்பு நாள்!


இறை இல்லத்தையா
இடித்தார்கள்...?
இந்திய இஸ்லாமியர்களின்
இதயங்களை அல்லவா இடித்தார்கள்!


இடிந்த இதயங்கள்...
படபடத்துக் கொண்டே இருக்கிரது
ஒரு நாள் வியாபாரம் செய்ய
இயக்கம் ஆரம்பித்தவர்கள்...!


இன்னும் வியாபாரத்தை
முடித்தபாடில்லை...!
ஆம்!இதோ அடுத்த ஆண்டு
பள்ளி வாசலை கட்டி விட்டு வருகிறோம்..!


என்று புறப்பட்டவர்கள்
இன்னும் சொன்ன இடத்திலேயே
நிற்கிறார்கள் ஆனால்.. நம்மவர்கள்
இன்னும் ஏமாந்து நிற்கிறார்கள்!!!


முஸ்லிம் லீக் மட்டும்
டிசம்பர் 6 க்கு என்ன செய்யும்?

ஆக்கப்பூர்வமான பணிகளை
அரவமில்லாமல் செய்கிரதே...!
நாட்டை ஆளுபவர்களுக்கு எத்தனை
ஆயிரம் கடிதங்கள்,தந்திகள்..?


இடித்து விட்டு பாறாளுமன்றத்தில்
அமர்ந்திருந்த அத்வானி,ஜோஷி போன்ற
எதிரிக்களை நேரிலே
குற்றவாளிக்காளே வெளியேறுங்கள்
இன்று வீர கர்ஜனை செய்ததது
முஸ்லிம் லீக் தலைவர்கள் தானே?


எத்தனை சமய,சமூக நல்லிணக்க
கூட்டங்கள்...?
இடித்தப் பள்ளியை கட்டித் தாருங்கள்
என்று ச்கோதர சமுதாய தலைவர்களின்
வேண்டுகோளாக பேச வைத்தது...?


இன்றும் நாங்கள் சொல்லுவது!
ஆண்டவனின் நீதிமன்றத்தை
நம்பி நிற்பவற்கள் நாம்...,


இருந்தாலும்,இந்தியாவின்
இறையான்மைக்கு ஊறு வேண்டாம் என்று
இந்நாட்டின் நீதி மன்றத்தையும் நம்பி
நிற்கிறோம்...!


பள்ளி வாசல் நமக்கே என்ற
பக்குவமான உண்மை தீர்ப்பிர்க்காக!!!

சரி
இந்தியாவில் எத்த்னை மாநிலங்கள்
அங்குள்ள முஸ்லிம்கலெல்லாம்
டிஸம்பர் பிஸ்னஸ்
செய்வதில்லையே ஏன்..?


அவர்களும் நம்பி நிற்கிறார்கள்
நீதிமன்ற தீர்ப்பு நமக்கென்று...!
இனி நாமும் சொல்லுவோமே
டிஸம்பர் ஆறே அமைதி பெறு என்று!!!


டிஸம்பர் ஆறே உன்னை
மறக்கவே மாட்டோம்
மாண்டவர்கள் நங்கள் தானே..?
மருந்தாக தருவோம் மக்களுக்கு!


சமய நல்லிணக்க கூட்டங்கள்
வாயிலாக சகோதர வாஞ்சையோடு
சபதமெடுப்போம்
சத்தியம் பள்ளி வாசல் சமுதாயத்திற்க்குத் தான்!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in

Wednesday, November 19, 2008

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌ம் மாவ‌ட்ட‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் 15 ந‌வ‌ம்ப‌ர் 2008 ச‌னிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.
மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஹாஜி எம்.எஸ். சௌக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். பேரையூர் ம‌வ்ல‌வி சாகுல் ஹ‌மீது அரூஸி இறைவ‌ச‌னங்க‌ளை ஓதினார்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று தீர்மான‌ங்க‌ளை முன்மொழிந்தார். கூட்ட‌த்தில் ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவை வ‌ருமாறு :

மறைந்த‌ மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.ப‌க்ருதீன் ம‌றைவுக்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. அன்னார‌து தியாக‌ மன‌ப்பான்மையை மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ள் நினைவு கூர்ந்த‌ன‌ர். அவ‌ருக்காக‌ துஆ ஓத‌ப்ப‌ட்ட‌து.

இராம‌நாத‌புர‌ம், விருதுந‌க‌ர், சிவ‌கெங்கை,க‌ன்னியாகும‌ரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ள் ப‌ங்கேற்கும் ம‌ண்ட‌ல மாநாட்டினை இராம‌நாத‌புர‌த்திலேயே ந‌ட‌த்த‌ மாநில த‌லைமையினை கேட்டுக் கொள்வ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ 31 பேர் அட‌ங்கிய‌ குழு ஏற்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌து. இக்குழு பிற‌ மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் செய்யும்.
டிச‌ம்ப‌ர் மாத‌ம் 26,27 ஆகிய‌ தேதிக‌ளில் உத்திர‌ பிர‌தேச‌ மாநில‌ம் ல‌க்ணோவில் ந‌ட‌க்கும் அகில‌ இந்திய‌ மாநாட்டில் மாவ‌ட்ட‌த்தில் இருந்து அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ப‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற‌வாளியை க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இல‌ங்கைத் த‌மிழ‌ர் துய‌ர்துடைக்க‌ ஒத்துழைப்பு ந‌ல்கி வ‌ரும் அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் ந‌ன்றி தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

மேலும் இப்பிர‌ச்ச‌னையில் ஒரு குழுவை ஏற்ப‌டுத்த‌ பிர‌த‌ம‌ரை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கேட்டுக் கொள்ள‌வேண்டும் என‌வும், அக்குழு இல‌ங்கை சென்று பிர‌ச்ச‌னைக‌ளை ஆராய்ந்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டது.
ராமேசுவ‌ர‌ம் தொட‌ர்வ‌ண்டிப்பாதை விரிவாக்க‌ப் ப‌ணி ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் அர‌சு அறிவித்த‌ப‌டி வ‌ட‌மாநில‌ங்க‌ளை இணைக்கும் வ‌ண்ண‌ம் தொட‌ர்வ‌ண்டிக‌ளை விட‌ அர‌சும், ர‌யில்வே நிர்வாக‌மும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்.

மாநில‌ பொருளாள‌ர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்ற‌றிக்கை கூட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌யிற்சிப் பாச‌றைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌னைக்குள‌ம், ம‌ண்ட‌ப‌ம், கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ முஸ்லிம் லீக் கிளைக‌ளுக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதே போல் மாவ‌ட்ட‌த்தின் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் ப‌யிற்சிப் பாச‌றையினை விரைந்து ந‌ட‌த்தி முடிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

சென்னையில் ந‌டைபெற்ற‌ மாநில‌ மாநாட்டில் ஆர்வ‌த்துட‌ன் அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ற‌ அனைவ‌ருக்கும் பார‌ட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இம்மாநாட்டுக்காக‌ சீருடைக‌ளை தயாரித்து வ‌ழ‌ங்கிய‌ ப‌னைக்குள‌ம் ந‌க‌ர‌ முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. என்ப‌ன‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை செய்தித் தொட‌ர்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ப‌னைக்குள‌ம் அபு முஹ‌ம்ம‌து, கீழ‌க்க‌ரை வ‌ரிசை முஹ‌ம்ம‌து ஹாஜியார், கீழ‌க்க‌ரை லெப்பைத்த‌ம்பி, ஆர்.எஸ்.ம‌ங்க‌ல‌ம் அமானுல்லாஹ், தேவிப‌ட்டிண‌ம் சித்திக், ம‌ண்ட‌ப‌ம் லியாக்க‌த் அலி, வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம், இராம‌நாத‌புர‌ம் சாதுல்லாஹ் கான், இராம‌நாத‌புர‌ம் ம‌ணிச்சுட‌ர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுள‌த்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம் துஆவுட‌ன் செய‌ற்குழுக் கூட்ட‌ம் நிறைவுற்ற‌து. கூட்ட‌த்திற்குப் பின்ன‌ர் மீன் பொறிய‌லுட‌ன் ம‌திய‌ உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )

குவியலாக மாறட்டும்....!

குவியலாக மாறட்டும்....!
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.
தம்பி...!
உன்னைத் தான்...!!
காயிதே மில்லத்தும்,
சிராஜுல் மில்லத்தும்,
ஏன் நமது முனீருல் மில்லத்தும் கூட


அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
தம்பி...!உன்னைத்தான்..!!
இந்த வார்த்தைகளை வைத்து
நம்மை நம் தலைவர்கள்
அறவழியில் நடத்துகின்றனர்..!


கருத்தரிந்த காலம் முதல்
கட்டாய வசூல் செய்ததில்லை
முஸ்லிம் லீக்!

கடமை என்று வந்து விட்டால்
கட்டாயம் அதில் முஸ்லிம் லீக்
பங்கும் படியாமல் இருந்ததில்லை..!

இன்று...!
முஸ்லிம் லீகிற்க்கு நிதி வேண்டும்
திரட்ட களத்தில் இறங்குங்கள்..!இது பொருளாளர்
வடக்கு கோட்டையாரின் வாஞ்சையான வேண்டுகோள்!!!


ஆம் சொந்தங்களே...!
இது வரை நம் தலைவர்கல் நம்மை
தம்பி என்று அழைத்து...
தர்பியத் செய்து வந்தார்கள்!


ஆனால்...!இன்று
தேங்கி அழைக்கிரார்கள்...!
அவர்களுக்கு பயம்,நம்மை
பாரத்தில் ஆழ்த்துகிரோமோ என்று..!


நாம் சொல்ல வேண்டாமா..?
வலது கைக்கு கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இறுக்கிறதென்று...!
இது தானே நாம் செய்து
வரும் பாரம்பரியம்...!


படம் பிடித்து...
புடம் போட்டு...
துண்டு விரித்தோமா..?


தூய எண்ணத்தை சொல்லி
கேட்டோமே மாண்டவர்களுக்கு
மீலாது ஊர்வலத்தில்...!அன்று!


அரவமில்லாமல் ஆதரவளித்தாரே
சுனாமியில் சிக்கியவர்களுக்கு
தாய்ச் சபையின் பெயரைச் சொல்லி பொதுச் செயலாளர்...!
அவைகளை சொல்லிக் காட்டவில்லையே நாம் இன்று...!


நாம் சொல்லிக் காட்டாததின்
விளைவு நிதி நெருக்கடி..!
இனி வரக் கூடாது அடிக்கடி...!


உரிமையோடு சமுதாயத்திடம்
சென்று உண்மை பேசுவோம்...!
உவப்புடன் தருவதை பெற்று
உள்ள்ம் பூரிப்போம்!


தாய்ச் சபையின் உரங்களாக...
விழுதுகளாக வீற்றிருக்கும்
பெரியவர்களின் அனுமதியோடு...
அவர்களை அசர வைக்க
புறப்படுவோமே...! பெருவதற்க்கு...!


வசூலை வேளையாக செய்து,
கொண்டிருப்பவர்களல்ல நாம்
வேளையின் தேவைக்காக,காலத்தின் வேகத்திற்க்காக
ஒரே ஒறு முறை உங்களிடம்!!


உரிமை பெற்றவர்கள் என்ற
உரிமையோடு...!சமுதாயத்தின்
உண்மையான உதிரத்தின் உணர்வோடு
கனிந்த இதயத்தோடு கைகுலுக்கும் உங்களை
கடமை உணர்வோடு கட்டித் தழுவுங்கள் எங்களை!!!


குருவிகளாக சேகரிப்போம்..!
குவியலாக மாறட்டும்..!
தாய்ச் சபையின் பணிகள் மிளிரட்டும்...!


Abdul rahman

ibnuthalabathi@yahoo.co.in

Wednesday, September 24, 2008

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேச்சு


ஆம்பூர்,செப்.25-

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேசினார்.

பாராட்டு விழா

வேலூர் மாவட்ட தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.குணசேகரன், கரும்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை.கருணாகரன், பாராஞ்சி சி.எஸ்.ஐ. நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜேபஸ்சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், கொர்னேலியஸ் திவாகரன், லட்சுமிபாய், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் டி.மணிவண்ணன் வரவேற்று பேசினார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல்பாசித் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது

ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கு அதிகமாக இருக்க வேண்டும். சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் உள்ளது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது கல்வியின் மதிப்பு உயர்ந்துள்ளது.

மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களின் பெற்றோருக்கு தெரியபடுத்த வேண்டும். தாய், தந்தை உறவைவிட புனிதமான உறவான ஆசிரியர், மாணவன் உறவை மேம்படுத்தும் பணி ஆசிரியர்கள் கையில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேரணாம்பட்டு எம்.எல்.ஏ.சின்னசாமி, ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நகரசபை துணை தலைவர் தமிழரசிலட்சுமிகாந்தன், பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதிவில்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவாஜிராவ் நன்றி கூறினார்.

பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்

பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்

http://www.muslimleaguetn.com/news.asp

பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.



மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-



பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.

நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.

சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.

சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.

மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.

பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.

Tuesday, September 23, 2008

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி
காதர்மொய்தீன் எம்.பி. வழங்கினார்


மேலப்பாளையம், செப்.24-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று காதர் மொய்தீன் எம்.பி. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.

மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "மேலப்பாளையம் பைத்துல் மால்" என்ற இஸ்லாமிய பொது நிதியத்தின் சார்பில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ செலவு, திருமண நிதி உதவி, மாணவ-மாணவிகளுக்கு படிப்புக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இலவச "பித்ரா" அரிசி

அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக "பித்ரா" அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கொட்டிகுளம் பஜாரில் பைத்துல்மால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக பைத்துல்மால் உறுப்பினர்களது பிரதிநிதிகள் உள்பட 500 பேருக்கு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு இருந்தது.

அரிசி வழங்கும் நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எம்.அப்துல் கபூர் வரவேற்று பேசினார். இந்திய ïனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கலந்து கொண்டு 21/2 கிலோ அரிசி பைகளை முதற்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதீன், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.அப்துல் ரகுமான், என்.எம்.எச்.அனீபா, ஓய்வு பெற்ற அரசு நூலகர் ஓ.எம்.சாகுல் அமீது, தொண்டர் அணித்தலைவர் பீமா இல்லியாஸ், பிரசாரக்குழு பொறுப்பாளர்கள் மில்லத் காஜா, எம்.ஜி.காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித்தலைமை ஆசிரியரும், மேலப்பாளையம் பைத்துல்மால் பொருளாளருமான பி.எம்.காஜா நஜிமுத்தீன் நன்றி கூறினார்.