Showing posts with label தமிழக முதல்வர். Show all posts
Showing posts with label தமிழக முதல்வர். Show all posts

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்




சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=