Monday, February 1, 2010

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் முஸ்லிம் லீக் சார்பில் மருத்துவ முகாம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் முஸ்லிம் லீக் சார்பில் மருத்துவ முகாம்



சேலம், பிப். 1:

61வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர 35வது கோட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாபெரும் மருத்துவ முகாமை நடத்தி யது.

24ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சேலம் பொன் னம்மா பேட்டை தம்பி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஜே.பி. ஸ்கூலில் நடைபெற்ற இம் முகாமிற்கு 35வது கோட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ். முஹம்மது இசாக் தலைமை தாங்கினார், ஏ. ஷாகுல் ஹமீது ஹெச்.எம். அபுதாஹிர், எஸ். முஹம் மது ஹனீப் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கே. முஹம்மது பாபு வரவேற்று பேசினார்.

சேலம் மாநகர மேயர் ரேகா பிரியதர்ஷினி முகாமை துவக்கி வைத் தார், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவ ரும் மாவட்ட தலைவரு மான எம்.பி., காதர் ஹ{சைன், மாவட்டச் செய லாளர் கே.எம். முஹம்மது ரபீக், மாநகரத் தலைவரும் மண்டல முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரு மான ஏ. அன்சர் பாஷா, மாநகரச் செயலாளர் எம். நசீர் பாஷா, மாமன்ற உறுப்பினர் எஸ். சாஜிதா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சாதிக் பாட்சா (எ) அன்னு, மாநகர இணைச் செயலா ளர் வி.ஏ. ஷிகாபுதீன், மாநகர இளைஞர் அணி தலைவர் முஹம்மது நுஃமான், வர்த்தக அணி யின் ஜாகிர், வழக்கறிஞர் அணியின் நஜீர் அஹ்மது, மகளிர் அணியின் உமய்யா பானு, காயிதெ மில்லத் பேரவை யின் லியாகத் அலிகான் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

சென்னை அகர்வால் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன், சேலம் ரத்த வங்கி ஆகியவை இணைந்து கண் பரிசோ தனை, ரத்தப் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் களை நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோட்டச் செய லாளர் முஹம்மது ஹ{சேன், டி.சர்புதீன், ஏ. மஹதீர், ஐ. சதாம் உசேன், சலீம், முஸ்தபா, ஜானி பாஷா, ஹெச்.எம். மௌ லானா, ஹெச்.எம். இலி யாஸ், ஏ. அஸ்கர் அலி, ஏ.குதுப் அலி, ஏ. பர்கத் அலி, டபிள்யு. அப்சல் அஹமது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.