Monday, February 1, 2010

முஸ்லிம் லீக் சாதிக்காத எதையும் வேறு யார் சாதித்திருக்கிறார்கள்? தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் எழுச்சி உரை

முஸ்லிம் லீக் சாதிக்காத எதையும் வேறு யார் சாதித்திருக்கிறார்கள்? தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் எழுச்சி உரை

சென்னை, பிப். 1:
நீதியரசர் ரஜேந்திர சச்சார், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெற்றுத் தந்த சாதனைகள்!.
நாங்கள் சாதிக்காத எதையும் வேறு யாராவது சாதித்திருக்கிறார்களா? என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் கேள்வி எழுப்பினார்.
இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட அமைப்புக்களைச் சார்ந்த கடலூர், வேலூர், சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அவற்றிலிருந்து விலகி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த உங்களையெல்லாம் மன தார வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தாய்ச்சபையில் இணைவதற்காக தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜில் கூட்ட அரங்கிற்கு வந்தபோது இந்த அரங்கம் சிறியதாக இருக்கிறதே, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு பெரிய அரங்கம் தேவை என கூறினேன். உடனடியாக அந்த துஆ இறைவனால் ஏற்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கானோரை உட்கார வைக்கக் கூடிய இந்த அருமையான அரங்கத்தை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிகழ்ச்சிகளுக்கு எப் போதும் தரத் தயார் என இங்கே அறிவித்த சென்னை ஹஹபைஜி மஹால் ஏ.எம். புகாரி ஆடிட் டோரியத்தின் உரிமையா ளர் சகோதரர் ருமைசுத்தீன் பைஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை திருச்சியில்தான் நடத்துவது வழக்கம். அதற்கு காரணம் அங்கே எல்.கே.எஸ். மஹாலை முஸ்லிம் லீகிற்காக தந்து விடுவார்கள். நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சி யையும் நடத்தக் கூடிய ஒரு வாய்ப்பை அன்றுமுதல் இன்றுவரை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த எல்.கே.எஸ். மஹால் பெயரை சர்வதேச அள விற்கு கொண்டு சென்ற பெருமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகையே சாரும்.
அதே போன்று சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலின் புகாரி ஆடிட் டோரியத்தின் பெருமை யும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சி களால் சர்வதேச அளவில் சென்றடையும். முஸ்லிம் லீகிற்கு உதவி செய்தவர்கள் இறைவனுடைய உதவியை பெறுவார்கள். நல்ல உள் ளத்தோடு அறிவித்த ருமைசுத்தீன் பைஜி அவர் களுக்கு இறைவன் எல்லா உதவிகளையும் செய்ய பிரார்த்திப்போம்.
ஆன்மீகப் பெரியார்களின் துஆக்கள்
அல்ஹாஜ் மௌலானா பைஜி ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்கள் அன்மை காலத் தில் வாழ்ந்து மறைந்த பெரியார். ஷெய்குமார்கள், ஆன்மீக பெரியவர்கள், சங்கைக்குரிய ஆலிம் பெரு மக்கள் எங்கே இருந்தா லும் அவர்களிடத்தில் துஆவை பெறவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். பெரியார்களுடைய துஆக்கள்தான் எனக்கு ஒரு வலிமையை தந்துள்ளது.
ஆன்மீகப் பெரியார்கள் செய்யும் துஆக்கள் உரிய இடத்தில் கப+லைப் பெற் றுத் தரும். நல்லவர்கள் வாழுகின்ற காரணத்தால் தான் துஆக்கள் கப+லாகின் றன. உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய ஆன்மீகச் செல்வர்களை நாம் நாடிச் செல்கிறோம் என்றால் தேன் இருக்கு மிடத்தில் வண்டுகள் நாடிச் செல்வதைப்போலத்தான். இந்த இணைப்பு விழா அப்படிப்பட்ட ஆன்மீகப் பெரியார்களுடைய, ஆலிம் பெருமக்களுடைய துஆக்களோடு இன்று நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் எல்லா கட்சி களையும்போல் ஒரு கட்சி என்று நினைத்தால் அது தவறாகும். சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம் லீகில் இல் லாத முஸ்லிம்களே இல்லை என்ற நிலை இருந் தது. சுதந்திரத்திற்கு பின்பு முஸ்லிம் லீகில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று சொல்லப் பட்டு இருந்தவர்கள் எல்லாம் வெளியேறிக்கொண் டிருந்த ஒரு காலமாக இருந்தது. அதை தனி ஆளாக நின்று தடுத்து நிறுத்தி முஸ்லிம் லீகில் இருந்தால்தான் முஸ்லிம் களுக்கு பெருமை|| என்ற நிலையை ஏற்படுத்திக் காட்டியவர் கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத்.
இன்று முஸ்லிம்கள் பல் வேறு கட்சிகளில் இணைந்து செயல்படு கிறார்கள். முஸ்லிம்களுக் காகவே பல கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் என்ற பெய ரைக்கூட வைத்துக் கொள் கிறார்கள். ஏன், 58 முஸ்லிம் அமைப்புக்கள் இன்று தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. ஆனால், இன்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டு அவர்கள் எல்லாம் வெளியேறி இன்று தாய்ச்சபையில் இணைந்த வண்ணம் உள்ளனர். புதிய புதிய அமைப்புக்கள் தோன்றும் போதெல்லாம் இருக்கின்ற அமைப்பு போதாதா என்று சமுதாயம் கேட்கத் தொடங்கி விட்டது.
முஸ்லிம் லீக் நமக்கும் தேவை + நாட்டுக்கும் தேவை
60ஆண்டுகால இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை அலசிப் பார்த் தவர்கள் தாய்ச்சபையின் பக்கம் இன்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நமக்கும் தேவை நாட்டுக்கும் தேவை என்ற உணர தலைப்பட்டிருக் கிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் இதில் இணைந்து வருகிறார்கள். எதிர்காலம் பற்றி அவர் களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் லீகின் பாதையை பார்த்துவிட்டு அதனால் ஏற்படும் பலனை தெரிந்து கொண்டே இங்கே இணை கிறார்கள்.
நாம் சத்தியத்தை எடுத் துச் சொல்கிறோம். ஆனால், இஸ்லாத்தை போதிக் கிறோம் என்ற பெயரால் தீவிரவாதத்தை போதிப் பதையும், பிரச்சா ரம் என்ற பெயரால் வசை பாடுவ தையும் சிலர் வழக்க மாகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே கிடை யாதா? என யோசித்தால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் அதற்கு முடிவா கத்தெரியும். எனவே, இதை பலப்படுத்துவது, வளர்ப் பது கட்டாயக் கடமையா கும். உங்களுடைய ஒத்து ழைப்பாலும், உதவியாலும் தான் இதை சாதிக்க முடியும்.
இங்கே வரவேற்புரை என்கின்ற பெயரால் ஒரு வாழ்த்துரையையே வழங்கிய மௌலானா நூருல்லா பைஜி ஹஜ்ரத் முஸ்லிம் ஓட்டுக்களெல் லாம் ஒரு முகமாக நிற்க வேண்டும் என்ற கருத்தை இங்கே எடுத்துச் சொன் னார்கள். ஒரு ஓட்டு என் பது ஆட்சியை மட்டுமல்ல சரித்திரத்தையே மாற்றி விடும்.
முஸ்லிம்களின் ஓட்டு வலிமை
இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியா வின் ஆட்சி மொழி எது என்ற பிரச்சினை வந்த போது பாபு ராஜேந்திர பிர சாத்தின் ஒரு ஓட்டால்தான் இந்திய ஆட்சி மொழி யானது. ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு என்பது மிக முக்கியமானது. அதே போன்றுதான் ஹஜ்ரத் அவர்கள் சுட்டிக் காட்டிய நம் சமுதாய ஓட்டும்.
சில தினங்களுக்கு முன் னால் நம்முடைய மணிச் சுடர் நாளிதழில் தம்பி காயல் மகப+ப் ஒரு செய் தியை வெளியிட்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் மிதின் கட்காரி செய்தியா ளர்களிடம் பேசுகையில், ஹஹபாரதீய ஜனதா கட்சிக் கும்-காங்கிரசுக்கும் பத்து சதவீத வாக்குகள்தான் வித்தியாசம், அந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நாங்கள் ஆட்சியை இழந் திருக்கிறோம்|| அந்த வாக்குகளை நாங்கள் பெறுவது எப்படி என்பது தான் இப்போது எங்கள் முன்னுள்ள ஒரே பிரச் சினை என குறிப்பிட்டிருந் தார்.
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 10 சதவீதம் முஸ் லிம்களுக்கு தனி இட ஒதுக் கீடு வேண்டும் என தன் பரிந்துரையில் குறிப்பிட் டுள்ளார். அந்த 10 சதவீத முஸ்லிம் வாக்குகள்தான் இன்று பாரதீய ஜனதாவை சிந்திக்க வைத்திருக்கின்றன. அதை பெறுவது எப்படி என நிதின் கட்காரி யோசிக் கின்றார். புலி தன் வரியை மாற்றட்டும், வரிக்குதிரை யின் வரிகளெல்லாம் நீக் கப்பட்டு குதிரைவெள்ளை யாகட்டும். இது நடந்தால் பாரதீய ஜனதா தன் போக்கை மாற்றும்.
ஆனால், அது முக்கிய மல்ல. நம் வாக்கு வங்கியின் வலிமையை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த வாக்கு வங்கியை ஒருமுகப் படுத்தக் கூடிய பணியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இன்று செய்து வருகிறது. சமுதா யத்தை ஒற்றுமைப் படுத்தி அதன் பலனை நாம் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கி அதன் மூலம் முழு பலனும் நம் சமுதாயத் திற்கு கிடைக்க வேண்டும்.
முஸ்லிம் லீகின்
சாதனை
சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் இயக்கங்கள் நடத்துவது சமுதாயத்தை பிளவுபடுத்து வது புத்திசாலித்தனமானது அல்ல. இன்று 58 இயக்கங் கள் எதற்கு? புதிய புதிய இயக்கங்கள் தோன்றுவ தால் யாருக்கு லாபம். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செய்யாத ஒன்றை யார் செய்து விட்டார்கள். முஸ்லிம் லீக் சொல்லதா எதையும் இவர்கள் புதிதாக சொல்லி விட்டார்களா? நாங்கள் எழுதாத ஒரு தீர் மானத்தை இவர்களால் எழுந்த முடிந்ததா? நாங் கள் எழுதிய தீர்மானத் தைக் கூட இவர்கள் திருத்தி எழுதும்போது தப்பும் தவறுமாகத்தானே எழுதி வெளியிட்டார்கள்.
இட ஒதுக்கீடு யாருடைய சிந்தனையில் தோன்றியது? அதற்கு முதல் வடிவம் கொடுத்தவர்கள் யார்? சச்சார் கமிஷனுக்கும், மிஸ்ரா கமிஷனுக்கும் இன்று யார் யாரோ விளம் பரம் செய்துகொண்டிருக் கிறார்கள். வீதிக்கு வந்து வீராப்பு பேசுகிறார்கள். கூரை மீது ஏறி நின்று கொண்டு கூப்பாடு போடு கின்றார்கள். வானத்திற்குச் சென்று வாய்ப்பந்தல் போடுகின்றார்கள்.
ஆனால், உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாட்டை ஆளு கின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சென்ற முறை ஆட்சி அமைத்தபோது அதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பங்கேற்றது. அதில் இடம்பெற்ற கட்சிக ளெல்லாம் குறைந்த பட்ச செயல் திட்டங்களை அளித்திருந்தன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த குறைந்த பட்ச செயல் திட்டத்திற்கு நாங்கள் 13 திட்டங்களை முன்வைத் தோம். அதில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி 6 திட் டங்களை ஏற்றுக் கொண் டது. அதில் ஒன்று கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு பரிந் துரை பெறப்பட வேண்டும் என்பது.
முஸ்லிம்களின் பொருளாதார, வாழ்வா தார நிலமைகளை அறிய ஒரு கமிஷன் நியமிக்கப் பட வேண்டும் என்பது இந்தியாவின் பட்ஜெட் டில் 15 சதவீதத்தை முஸ்லிம் களுக்காக ஒதுக்கி அவர் களின் வாழ்வா தாரத்தை முன்னேற்ற செய்வது. உருதுக் கல்விக்கு முன் னுரிமை அளிப்பது சிறு பான்மை கல்வி நிலை யங்களுக்கு உதவி அளிக் கும் ஆஸாத் பவுண்டேஷ னுக்கு அளிக்கப்படும் மானியத்தை அதிகப்படுத் துவது. இந்த கோரிக்கை களெல்லாம் ஐக்கிய முற் போக்குக் கூட்டணியால் ஏற்கப்பட் டன. இன்னமும் சொல்லப் போனால் இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று பெயரைச் சூட்டியதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.
நாங்கள் அளித்த குறைந்த பட்ச செயல்திட் டத்தால் கிடைத்ததுதான் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷ னும் என்பதை நன்றியுள்ள எவரும் மறந்துவிடக் கூடாது.
இன்று மத்தியில் திருமதி சோனியா காந்தி யின் வழிகாட்டுதலில் முதல்வர் கலைஞரின் ஒத் துழைப்பில் பிரதமர் மன் மோகன் சிங் சிறுபான்மை முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கு ஆக்கப் ப+ர்வமான காரியங்களை செய்து வருகிறார்.
சச்சார் கமிஷன் பரிந் துரையின் அடிப்படையில் முஸ்லிம்கள் நிறைந்த 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது போதாது முஸ்லிம்கள் கணிசமாக வாழும் நகரங்களையும் இணைக்கப்பட வேண் டும் எனச்சொல்லி 497 நகராட் சிகள் இணைக்கப்பட்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இந்த சாதனைகள் யாருக் காவது தெரியுமா? இது போன்ற ஒரு சாதனையை யாவது யாராவது செய் திருக்க முடியுமா?
தாய்ச்சபையை
ஆதரிப்பீர்
எனவே, இந்த இயக்கம் வளர வேண்டுமா? வேண்டாமா? பெரியவர் களும் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைய வேண்டுமா? வேண்டாமா? இந்த சமுதாயம் மானத் தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.
இந்த இயக்கத்தை வளப் படுத்தவும், பலப்படுத்தவும் இளைஞர்களே முன் வாருங்கள், பெரியவர்களே ஆதரவைத் தாருங்கள், அறிஞர் பெருமக்களே துஆ செய்யுங்கள், எல்லோ ரும் ஒன்று சேர்ந்து உழைப் போம். இந்த இயக்கத்தை வளர்ப்போம், சமுதா யத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என கூறி தாய்ச்சபையில் இணைந் துள்ள அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.





--
QUAID-E-MILLATH FORUM-HONG KONG

Affiliated to Indian Union Muslim League-Tamil Nadu State

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA