தன்சுடர் சந்திரனை – பச்சை
தளிர்மணி கொடி வைத்தாய் – மேலாம்
விண்பட உயர்த்தி வைத்தாய் – எம்திறன்
விதழுற உணர்த்தி வைத்தாய் – அருள்
தமிழே முதல்மொழி – தமிழே மதுமொழி
தாரணி பாரதம் தந்த பழமொழி
அமையும் பொதுமொழியாக விழைந்தாய்
அரசியல் நிர்ணயம் ஆக்கி அளித்தாய்
காந்தியும் நேருவும் அபுல்கலாம் ஆஸாதும்
காஞ்சி திருநகர் கண்ணனாம் அண்ணாவும்
தீந்தமிழ் சேலத்து ராஜாஜியும்
பகுத்தறிவு தந்தை பெரியாரும்
செங்கோல் சிவஞான கிராமணி காமராஜரும்
தோழராய் சூழ்ந்திட தொண்டனாய் நின்றாய்
தொப்பியும் செருவாணி சூடி திகந்தாய்
வீழசழக்குகள் வியூகம் அமைத்தாய்
தொடர் வெற்றி கனிபெற நற்றுணை யானாய்
சாந்தி தழைத்திட காவலாய் நின்றாய்
சங்கையாய் காயிதெ மில்லத்து மாணாய்
மாந்தர் நலம் பெறவே மாளாதுழைத்தாய்
மகமது இஸ்மாயில் நாமம் அணிந்தாய்
ஆக்கியவர்
சௌந்தர்ய முத்திரை
தண்ணன் முஹம்மது மூஸா