Wednesday, June 3, 2009

வாழ்த்துக்கள். . . .

வாழ்த்துக்கள். . . .

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவராக மிளிர்ந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்க மேலும் ஒரு மணிமகுடமாய் வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி வாகையை வழங்கிய வல்ல ரஹ்மானுக்கே எல்லாப்புகழும். . . .

முஸ்லிம் லீக்கை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்ததுண்டு ஆனால் முஸ்லிம் லீக் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற வரலாற்று புத்தகத்தில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி, வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி வாகை சூடிய, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சிங்கம், சமுதாய சொந்தங்களின் நெஞ்சங்களில் நிறைந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். . . .

எங்கள் முஸ்லிம் லீக் கோட்டை, வேலூர் மக்களவை தொகுதியில் அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட என் சமுதாய சொந்தங்களுக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மற்றும் வாக்காளப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.....

தாய்ச்சபையின் உறுப்பினராக, நாடாளுமன்றத்தில் உங்களின் குரல் ஒலித்திட, சமுதாயம் வளம் பெற வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகின்றேன். ஆமீன். . .

அன்புடன்
தாய்ச்சபையின் தொன்டண்
அப்துல் முத்தலிப்
குவைத்

muthalif786@yahoo.com
abuwaseema@gmail.com