Wednesday, June 3, 2009

கண்ணியமிக்க ஒரு தலைவர்….

கண்ணியமிக்க ஒரு தலைவர்….

கண்ணியமிக்க ஒரு தலைவர்
காயிதெ மில்லத் இஸ்மாயில்
நுண்ணிய நெல்லை மாவட்டம்
நாட்டுக்களித்த பரிசெனலாம்

உறுதி படைத்த நெஞ்சமுடன்
உயரிய பண்புகள் பூண்டவராம்
இறுதிவரையில் நன்னெறியை
இறுகபிடித்த நல்லவராம்

தேன்போல் சுவைக்கும் தாய்மொழியாம்
தெவிட்டா வளமார் தமிழ்மொழியை
மாண்பார்நாட்டின் மொழியாக்க
மக்களவையில் மொழிந்தவராம்

கூட்டம் ஒன்றில் உரையாற்ற
கோழிக்கோடு நகருக்கு
நாட்டம் கொண்டு, சென்றாராம்
நண்பர் பலரை கண்டாராம்

மாசறுதலைவரை வரவேற்க்க மாளிகை பலவும் காத்திருக்க பாசமுடன் ஒரு விடுதிக்கு பரிவாய் சென்றே உறைந்தாராம் தனியறை ஒன்றில் தான்மட்டும் தங்கியிருந்தார் ராப்போது கனியும் தொண்டர் இரண்டொருவர்
காத்தே இருந்தனர் வெளியினிலே
இரவில் நடுநிசி நேரத்தில் – யாரோ அறையில் நடமாடும்
அரவம் கேட்ட ஒரு தொண்டர் ஆர்வத்துடனே – பார்த்தாராம்
தன்னுடை ஆடையை – தன்கைய்யால்
துவைத்து கழுவிய பெருந்தலைவர்
மின்னுறு விசிறி அடியினிலே
மெதுவாய் உலர்த்தி நின்றாராம்

மாண்புறு கூட்ட நிகழ்ச்சிக்கு
மாற்றும் ஆடையில்லாமல்
தான்பெறு எளிய ஆடையினை
தானே – துவைத்ததை அணிந்தாராம்

-மர்ஹூம் பேராசிரியர்
கா.அப்துல் கபூர் சாஹிப்

( இப்பாட‌ல் துபையில் ஜுன் 5 ஆம் தேதி ந‌டைபெறும் காயிதெமில்ல‌த் 114 வ‌து பிற‌ந்த‌ தின‌ நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கில் இசைய‌ருவி கும‌ரி அபுப‌க்க‌ர் அவ‌ர்க‌ளால் பாட‌ப்ப‌டுகிற‌து )