ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Saturday, June 20, 2009
தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது -தளபதி எ.ஷபிகுர்ரஹ்மான்
தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது -தளபதி எ.ஷபிகுர்ரஹ்மான்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நலம் நலனுக்கு கருணையுள்ள ரஹ்மான் அருள்புரிவானாக !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளர் எங்களின் இனியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் தெளிவு பிறந்தது வழி திறக்க வேண்டுமென்று தனது கவலையையும் அவர்கள் செய்த சிறப்பான செயல்பாடுகளையும் நினைவுபடுத்தி மணிச்சுடரில் எழுதி இருந்த வாசகம் ஏன் நெஞ்சை நெகிழ வைத்தது
காலையில் பஜ்ர் தொழுகைக்கு பின் ஏன் மகன் முஹம்மத் இஸ்மாயில் என்னை மகிழ்ச்சியோடு அழைத்து இன்றைய மணிச்சுடர் நாளிதழில் தலைவர் பேராசிரியர் அற்புதமாக எழுதியுள்ளார்கள் உடன் படித்து பாருங்கள் என்று சொன்ன உடன் விட்டிற்கு வந்து மணிச்சுடரை படித்தேன் தலைவரின் வாசகம் என்னை மகிழ்ச்சியிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது
நம் தாய் நாட்டின் தலைநகர் டெல்லிபட்டிணத்தில் சாஜகான் பாத்திலுள்ள பிரசித்திபெற்ற ஜாமிஆ மஸ்ஜித் எதிரிலுள்ள நாடு விடுதலைக்கு முன்பிலிருந்து தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் அலுவலகமாக இருந்து அங்கு முஸ்லிம் லீக்கின் பிறை நட்சத்திரக்கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்த முஸ்லிம் லீக்கின் அலுவலகம் பற்றிய செய்தியை இனிமையாக எழுதி இருந்தார்கள் பல்லாண்டுகளாக தொடர்ந்து பறந்து கொண்டிருந்த பிறை நட்சத்திரக்கொடியின் அலுவலகம் நமக்கு சொந்தமாக்கி -சொந்தக்கட்டிடமாக்கும் முயற்சி செய்து வருகிறோம் என்று எழுதியது நமக்கு மகிழ்வை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்
வட மாநிலங்களில் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிப்பற்றியும் குறிப்பாக உத்ரகாண்டம் மாநிலத்தின் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிப்பணிப்பற்றியும் அங்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பங்கேற்பதுபற்றியும் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே.எழுதியுள்ளச்செய்தி நமக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மையுள்ள செய்தியாகும் அல்ஹம்துலில்லாஹ்
தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது
தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம் தலைவர் அவர்களே கவலைப்படதிர்கள் முஸ்லிம் லீக்கின் புனித ஸ்தாபனத்தை தமிழகத்திலும் நாடெங்கும் பலப்படுத்திட தயாராக இருக்கிறோம் இதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக
வஸ்ஸலாம்