குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.
கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே
துவங்கியது. --
பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316,
http://iumlkuwait.blogspot.com,
http://qmfkuwait.blogspot.com.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Thursday, May 20, 2010
Sunday, June 7, 2009
கல்விக் கருத்தரங்கம்
அஸ்ஸலமு அலைக்கும்
நேற்றைய தினம் ( 05 ஜுன் 2009 - வெள்ளிக்கிழமை ) அமீரக காயிதே மில்லத் பேரவை எற்பாடு செய்திருந்த " கல்விக் கருத்தரங்கம்" மிகவும் சிறப்பாகும் , பயனுள்ளதாகவும் இருந்தது.
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 114 வது பிறந்த நாளில் அவர்களின் தியாக வரலற்றை சிறப்பு பேச்சாளர்கள் நினைவுகூர்ந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது.
இந்த சிறப்புமிக்க விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்ததற்கு என் மனமார்த நன்றி.இதுப்போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று சமுதாய சகோதரர்கள் பயன்பெற வேண்டும்.
அன்புடன்
S.ரியாஸ் அஹ்மத்
riyazpno@gmail.com
நேற்றைய தினம் ( 05 ஜுன் 2009 - வெள்ளிக்கிழமை ) அமீரக காயிதே மில்லத் பேரவை எற்பாடு செய்திருந்த " கல்விக் கருத்தரங்கம்" மிகவும் சிறப்பாகும் , பயனுள்ளதாகவும் இருந்தது.
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 114 வது பிறந்த நாளில் அவர்களின் தியாக வரலற்றை சிறப்பு பேச்சாளர்கள் நினைவுகூர்ந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது.
இந்த சிறப்புமிக்க விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்ததற்கு என் மனமார்த நன்றி.இதுப்போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று சமுதாய சகோதரர்கள் பயன்பெற வேண்டும்.
அன்புடன்
S.ரியாஸ் அஹ்மத்
riyazpno@gmail.com
Subscribe to:
Posts (Atom)