பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா விஜயம்’ என்ற திரைப்படப் பாடல் அது. அந்த திரைப்படத்திலே ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான் கதையின் நாயகன். தங்களின் சொற்ப வருமானத்திலே, திட்டமிட்ட சிக்கனமான செலவுகளால், நிம்மதியான-அமைதியான வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருந்த அந்த குடும்பம், தங்கள் வீட்டின் பக்கத்து பங்களாவில் குடிவந்த பாமா என்ற திரைப்பட நடிகையுடன் நட்பு பேணுவதற்காக தங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊதாரித்தனமாக ஆடம்பர செலவுகள் செய்து, அதனால் கடன்படுவதும், சொந்த சகோதரர் களும், குடும்பத் தலைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வதும், வன்மம் பாராட்டவதும், உறவுகள் சிதைவும் மிக அற்புதமாக காட்டப்பட்ட திரைப்படம் தான் பாமா விஜயம். தெளிந்த நீரோடை போல் அமைதியாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை அந்த `பாமா விஜயம்’ - நாசமாக்கி சாக்கடையாக்கி விடும். இன்று அதேபோல நம் நாட்டின் `பாமா விஜயம்’ ….- ஆம், ….ஒபாமா விஜயம் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்தியா வந்து சென்றுள்ளார். அவரின் வருகை உலகமெங்கம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவருக்குமே செய்யப்படாத வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரின் வருகையை ஒட்டி செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கினார். குழந்தைகளுடன் நடன மாடினார். பெருமுதலாளிகளுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பறந்து சென்று விட்டார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.900 கோடி. 3 நாட்களுக்கான பாதுகாப்பு செலவு சுமார் ரூ.2,700 கோடி எனப்படுகிறது. இவர் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என ஒரு பiயே மும்பை வந்திறங்கி விட்டது. அவர்கள் அனைத்து நவீன சாதனங் களும் பொருத்தப்பட்ட 13 நடுத்தர விமானங்கள், 3 அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஒரு கப்பல், 30 மோப்ப நாய்கள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அதிநவீன கருவிகளை தம்முடன் கொண்டு வந்தனர். ஒபாமா தங்கும் மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் டெல்லி மவுரியா ஓட்டல்களை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மிகத் தீவிர மாக நடத்தப்பட்டன. கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். வான்வழி தாக்குதல் ஏதும் நடந்தால் அதை முறியடிக்கத் தேவை யான நவீன கருவிகள் இக் கட்டிடங்களில் நிறுத்தப் பட்டன. சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் மும்பையிலும், டெல்லியிலும் நிறுவப்பட் டன. ஒபாமா சனிக்கிழமையன்று மும்பை வந்திறங்கிய போது அவருடன் சுமார் 3 ஆயிரம் பேர் வந்தனர். இவர்களில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க கம்பெனி அதிபர்கள் ஆகியோரும் அடங்குவர். ஒபாமா அவர்கள் அமெரிக்க வான்படை யின் ஏர்போர்ஸ் - 1 என்ற விமானத்தில் 40 விமானங்கள் புடைசூழ வந்திறங்கினார். இத்துடன் அதிநவீன கருவிகள் பொருந்திய இரண்டு ஜெட் விமானங்களும் வந்தன. குண்டு துளைக்காத கார்கள் ஆறும், ஒபாமாவின் உபயோகத்துக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரும் அவருடன் வந்திறங்கியது. அந்த காரில் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதிபர் இயக்கக் கூடிய பொத்தானும் அந்த காரிலே வடிவமைக்கப்பட்டிருந்தது.அதிபரும் அவருடன் வந்தவர்களும் தங்க தாஜ் ஓட்டலிலும், மற்ற ஓட்டல்களிலும் 800 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.ஒபாமா குழுவினரின் வருகைக்கு அரை மணி நேரம் முன்னமே மும்பை வான் வழி மூடப்பட்டது. வேறு எந்த விமானமும் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்திய கடற்படையும், விமானப்படையும் மும்பை கடல் பகுதியையும், வான் பகுதியையும் வலம் வந்தன. 34 போர்க் கப்பல்களும், ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், நம் நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு பிரிவான என்.எஸ்.ஜி. கமாண்டோகள், துணை ராணுவப் படையினர், மாநில காவல் படை என நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலே அதிபர் ஒபாமா முன்னிலையிலே அமெரிக்க முதலாளிகள். இந்திய அரசுடனும், இந்திய முதலாளிகளுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் ஒபாமா விஜயத்தின் முக்கிய நோக்கமே.இந்த வியாபார ஒப்பந்தங்களில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போயிங் நிறுவனம் போர் விமானங்களை விற்க 410 கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க போயிங் தொழிற்சாலையில் 22,160 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியன் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு தேவையான தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்தில் பொருத்தக்கூடிய எப்.414 என்னும் என்ஜின்கள் 107 வாங்க அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியிடம் ஒப்பதமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 கோடி டாலர்கள். ஆகும். இதன் மூலம் சுமார் 4440 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ரயில்வே துறைக்கு 1000 ரயில் என்ஜின்களை விற்க அமெரிக்காவின் ஜி.இ. ட்ரான்ஸ்போர்டேஷன் அண்டு எலக்ட்ரோமோடிவ் டீசல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி பி-737-800 போயிங் விமானங்கள் -30 இந்திய நிறுவனத்திற்கு சப்ளை செய்யப் படும். இதன் மதிப்பு 300 கோடி டாலர்கள் இருக்கும் எனப்படுகிறது. இதன் மூலம் 12,970 அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அம்பானியின் நிறுவனங்கள் ஏறத்தாழ 700 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தின் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அதி நவீன டர்பைன்கள் 6-ம், நீராவி டர்பைன்கள் 3-ம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் 2,650 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது. அமெரிக்க எக்ஸ்போர்ட் - இம்போர்ட் வங்கி இந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர்கள் நிதி உதவி செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாசன் பவர் நிறுவனத்துக்கு தேவையான சுரங்க தளவாடங்களை அமெரிக்க புசிரெஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான நிதி உதவியான சுமார் 641 மில்லியன் டாலர்களையும் இந்த வங்கி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் சுமார் 1500 கோடி டாலர்கள் (ரூ.67,200 கோடி) மதிப்பில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒபாமாவின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய டெமாக்ரடிக் கட்சி தேர்தலிலே படுதோல்வியினை சந்தித்திருந்தது. அமெரிக்காவிலே பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை போன்றவை பெருகிவிட்ட தால், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒபாமா, இந்திய வருகையின் மூலம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு 1500 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி வியாபாரமும், அமெரிக்க மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற் படுத்தி கொடுத்துள்ளனர். அவர் தன்னுடைய உரையின் போது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தில் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவுடன் செய்யப்படுவதாகவும், அதை பெருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையான இந்திய சந்தையை கைப்பற்றி விழுங்க அமெரிக்க பெரு முதலாளிகள் திமிங்கலத்தைப் போல அலைகின்றனர். இந்த வியாபார ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் கருவூலங்களை நிரப்பிக் கொள்வதிலும், தங்கள் நாட்டில் niலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறியாக இருக்கின்ற னர்.ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாப்புக்கு செலவழித்து அமெரிக்கஅதிபர் இந்தியாவுடன் நல்லுறவும், நட்பும் பேணுவதற்கு வந்துபோவதாக ஊடகங்கள் ஊதுகின்றன.