Thursday, December 9, 2010

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

மஹல்லா ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பிற்கு கருத்தரங்கு

சமுதாயத்தின் வலிமைக்கு இலக்கு 2020 பிரகடனம்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ விருது

http://www.muslimleaguetn.com
http://mudukulathur.com


நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்திய முஸ்லிம்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து விட்ட தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த சமுதாயத்திற்கு எண்ணற்ற உரிமைகளை பெற்றுத் தந்தது.

இந்திய முஸ்லிம்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு அளப்பரிய தியாகங்களைச் செய்தது.

இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட சோதனையான கால கட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் உள்ளிட்ட தாய்ச்சபையின் தலைவர்கள் செய்த மகத்தான சாதனை இந்த சமுதாயத்தை தலை நிமிர செய்தது.

பச்சிளம் பிறைக் கொடிகள் எங்கெல்லாம் பட்டொளி வீசி பறந்தனவோ அந்த ஊர்களெல்லாம் அமைதியின் இருப்பிடங்களாக சிறப்பைப் பெற்றன.

ஆனால் இன்று சமுதாய ஒற்றுமை கேள்விக் குறியாகவும், மார்க்க கடமைகள் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டு விட்டன.

மஹல்லா ஜமாத் கட்டுக்கோப்பு சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

தேவையற்ற வாதங்களும், விதண்டாவாதங்களும் பிற சமய மக்களை கூட முகம் சுளிக்க வைக்கிறது.

மனநிறைவையும், மகிழ்வையும் கொண்டு வரும் ரமளான், பக்ரீத் பெருநாட்கள் கூட ஆளுக்கொரு நாள் என்று அறிவிப்புச் செய்து கொண்டாடப்படுவதால் கேலியாக்கப்பட்டுவிட்டன.

பாங்கு சத்தம் ஒலிக்கும் பள்ளிவாசல்களில் வேட்டுச் சத்தங்கள்.

குழப்பங்களும், குதர்க்கங்களும் ஒற்றுமையை மட்டும் சீர்குலைக்க வில்லை - சமுதாய வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்றன.

இந்த நிலைமை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தொடருவது?

எனவேதான் இவைகளை முடிவிற்கு கொண்டு வர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் காலை அமர்வாக நடத்தப்படுகிறது.

சங்கைக்குரிய உலமா பெருமக்கள், பல துறைகளின் அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மஹல்லா ஜமாஅத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

பிற்பகலில் பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி சீருடை அணிந்த இளைஞர்களின் கண்கவர் அணிவகுப்பாக நடைபெறுகிறது.

மாலையில், தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மாநாட்டின் நிறைவு விழா.

கல்வி வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உயர்த்தித் தர வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020 பிரகடணம் நம் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹ்மது அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சம்பவங்களையும், எதிர் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் மனதில் கொண்டு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்ட இலக்கு 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு, நாம் பின்பற்ற வேண்டிய மணிவிளக்கு !

இலக்கு 2020 பிரகடணத்தை பெற்றுக் கொண்டு தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. குஞ்சாலி குட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து

இளமையில் ஒரு கையில் பச்சிளம் பிறைக்கொடியை பிடித்த காலம் தொட்டு, இன்று வரையிலும் நம் சமுதாயத்திற்கு உற்ற உயிர் தோழராக இருந்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த மாண்பிமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய E.T.A. குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செய்யது எம். சலாஹுதீன் உள்ளிட்ட புரவலர்கள் இந்த விருதினை வழங்குகின்றனர்.

சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்கிறார்.

உள்நாட்டு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து ஆர்வத் துடிப்போடு சமுதாய பெருந்தகைகள் இம்மாநாட்டில் சங்கமிக்கின்றனர்.

டிசம்பர் – 11 தாம்பரத்தில் நடப்பது கூடிக் கலையும் மாநாடல்ல !

கொள்கை லட்சிய வாதிகளின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் மாநாடு !

சமுதாய வலிமைக்கு

திட்டம் தீட்டித் தரப்போகும் மாநாடு !

இம்மாநாட்டில் …

சமூகத்தை சீர்குலைப்பவர்களை

அடையாளம் காட்டுவோம் !

சமுதாயத்தை வளப்படுத்தும் செயல் திட்டங்களை ஆவணப்படுத்துவோம் !

இம்மாநாடு

வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்

இதில் பங்கேற்பது கிடைத்தற்கரிய பாக்கியம் !