பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா விஜயம்’ என்ற திரைப்படப் பாடல் அது. அந்த திரைப்படத்திலே ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான் கதையின் நாயகன். தங்களின் சொற்ப வருமானத்திலே, திட்டமிட்ட சிக்கனமான செலவுகளால், நிம்மதியான-அமைதியான வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருந்த அந்த குடும்பம், தங்கள் வீட்டின் பக்கத்து பங்களாவில் குடிவந்த பாமா என்ற திரைப்பட நடிகையுடன் நட்பு பேணுவதற்காக தங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊதாரித்தனமாக ஆடம்பர செலவுகள் செய்து, அதனால் கடன்படுவதும், சொந்த சகோதரர் களும், குடும்பத் தலைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வதும், வன்மம் பாராட்டவதும், உறவுகள் சிதைவும் மிக அற்புதமாக காட்டப்பட்ட திரைப்படம் தான் பாமா விஜயம். தெளிந்த நீரோடை போல் அமைதியாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை அந்த `பாமா விஜயம்’ - நாசமாக்கி சாக்கடையாக்கி விடும். இன்று அதேபோல நம் நாட்டின் `பாமா விஜயம்’ ….- ஆம், ….ஒபாமா விஜயம் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்தியா வந்து சென்றுள்ளார். அவரின் வருகை உலகமெங்கம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவருக்குமே செய்யப்படாத வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரின் வருகையை ஒட்டி செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கினார். குழந்தைகளுடன் நடன மாடினார். பெருமுதலாளிகளுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பறந்து சென்று விட்டார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.900 கோடி. 3 நாட்களுக்கான பாதுகாப்பு செலவு சுமார் ரூ.2,700 கோடி எனப்படுகிறது. இவர் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என ஒரு பiயே மும்பை வந்திறங்கி விட்டது. அவர்கள் அனைத்து நவீன சாதனங் களும் பொருத்தப்பட்ட 13 நடுத்தர விமானங்கள், 3 அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஒரு கப்பல், 30 மோப்ப நாய்கள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அதிநவீன கருவிகளை தம்முடன் கொண்டு வந்தனர். ஒபாமா தங்கும் மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் டெல்லி மவுரியா ஓட்டல்களை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மிகத் தீவிர மாக நடத்தப்பட்டன. கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். வான்வழி தாக்குதல் ஏதும் நடந்தால் அதை முறியடிக்கத் தேவை யான நவீன கருவிகள் இக் கட்டிடங்களில் நிறுத்தப் பட்டன. சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் மும்பையிலும், டெல்லியிலும் நிறுவப்பட் டன. ஒபாமா சனிக்கிழமையன்று மும்பை வந்திறங்கிய போது அவருடன் சுமார் 3 ஆயிரம் பேர் வந்தனர். இவர்களில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க கம்பெனி அதிபர்கள் ஆகியோரும் அடங்குவர். ஒபாமா அவர்கள் அமெரிக்க வான்படை யின் ஏர்போர்ஸ் - 1 என்ற விமானத்தில் 40 விமானங்கள் புடைசூழ வந்திறங்கினார். இத்துடன் அதிநவீன கருவிகள் பொருந்திய இரண்டு ஜெட் விமானங்களும் வந்தன. குண்டு துளைக்காத கார்கள் ஆறும், ஒபாமாவின் உபயோகத்துக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரும் அவருடன் வந்திறங்கியது. அந்த காரில் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதிபர் இயக்கக் கூடிய பொத்தானும் அந்த காரிலே வடிவமைக்கப்பட்டிருந்தது.அதிபரும் அவருடன் வந்தவர்களும் தங்க தாஜ் ஓட்டலிலும், மற்ற ஓட்டல்களிலும் 800 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.ஒபாமா குழுவினரின் வருகைக்கு அரை மணி நேரம் முன்னமே மும்பை வான் வழி மூடப்பட்டது. வேறு எந்த விமானமும் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்திய கடற்படையும், விமானப்படையும் மும்பை கடல் பகுதியையும், வான் பகுதியையும் வலம் வந்தன. 34 போர்க் கப்பல்களும், ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், நம் நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு பிரிவான என்.எஸ்.ஜி. கமாண்டோகள், துணை ராணுவப் படையினர், மாநில காவல் படை என நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலே அதிபர் ஒபாமா முன்னிலையிலே அமெரிக்க முதலாளிகள். இந்திய அரசுடனும், இந்திய முதலாளிகளுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் ஒபாமா விஜயத்தின் முக்கிய நோக்கமே.இந்த வியாபார ஒப்பந்தங்களில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போயிங் நிறுவனம் போர் விமானங்களை விற்க 410 கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க போயிங் தொழிற்சாலையில் 22,160 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியன் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு தேவையான தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்தில் பொருத்தக்கூடிய எப்.414 என்னும் என்ஜின்கள் 107 வாங்க அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியிடம் ஒப்பதமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 கோடி டாலர்கள். ஆகும். இதன் மூலம் சுமார் 4440 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ரயில்வே துறைக்கு 1000 ரயில் என்ஜின்களை விற்க அமெரிக்காவின் ஜி.இ. ட்ரான்ஸ்போர்டேஷன் அண்டு எலக்ட்ரோமோடிவ் டீசல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி பி-737-800 போயிங் விமானங்கள் -30 இந்திய நிறுவனத்திற்கு சப்ளை செய்யப் படும். இதன் மதிப்பு 300 கோடி டாலர்கள் இருக்கும் எனப்படுகிறது. இதன் மூலம் 12,970 அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அம்பானியின் நிறுவனங்கள் ஏறத்தாழ 700 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தின் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அதி நவீன டர்பைன்கள் 6-ம், நீராவி டர்பைன்கள் 3-ம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் 2,650 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது. அமெரிக்க எக்ஸ்போர்ட் - இம்போர்ட் வங்கி இந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர்கள் நிதி உதவி செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாசன் பவர் நிறுவனத்துக்கு தேவையான சுரங்க தளவாடங்களை அமெரிக்க புசிரெஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான நிதி உதவியான சுமார் 641 மில்லியன் டாலர்களையும் இந்த வங்கி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் சுமார் 1500 கோடி டாலர்கள் (ரூ.67,200 கோடி) மதிப்பில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒபாமாவின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய டெமாக்ரடிக் கட்சி தேர்தலிலே படுதோல்வியினை சந்தித்திருந்தது. அமெரிக்காவிலே பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை போன்றவை பெருகிவிட்ட தால், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒபாமா, இந்திய வருகையின் மூலம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு 1500 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி வியாபாரமும், அமெரிக்க மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற் படுத்தி கொடுத்துள்ளனர். அவர் தன்னுடைய உரையின் போது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தில் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவுடன் செய்யப்படுவதாகவும், அதை பெருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையான இந்திய சந்தையை கைப்பற்றி விழுங்க அமெரிக்க பெரு முதலாளிகள் திமிங்கலத்தைப் போல அலைகின்றனர். இந்த வியாபார ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் கருவூலங்களை நிரப்பிக் கொள்வதிலும், தங்கள் நாட்டில் niலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறியாக இருக்கின்ற னர்.ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாப்புக்கு செலவழித்து அமெரிக்கஅதிபர் இந்தியாவுடன் நல்லுறவும், நட்பும் பேணுவதற்கு வந்துபோவதாக ஊடகங்கள் ஊதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label வெ. ஜீவகிரிதரன். Show all posts

Sunday, November 28, 2010
Wednesday, May 19, 2010
நிழலும் நிஜமும் - வெ. ஜீவகிரிதரன் கட்டுரை

ஹைதராபாத் நகரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் - லஷ்கர் அமைப்பின் கைவரிசை என போலீஸ் சந்தேகம்|
- 15-5-2010 சனிக்கிழமை ஹிந்து| நாளிதழின் தலைப்பு செய்தி இது.
நாட்டின் எந்த மூலையில் துப்பாக்கி வெடித்தாலும், வெடிகுண்டுகள் வெடித்தாலும், படுகொலைகள் நடந்தாலும் உடனே ஏதேனும் ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். பல ஆண்டு காலம் பிணை மறுக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே அந்த இளைஞர்கள் சிறைகளில் வாடுவார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, பழி பாவங்களைச் சுமந்து சீரழியும். ஐந்து வருடங்களோ, பத்து வருடங்களோ வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து தடா, பொடா என்ற பயங்கரவாத தடுப்பு சட்டங்களாலும் பதம் பார்க்கப்படும். ஊடகங்களும் தத்தம் ஊகங்களை செய்திகளால் வெளியிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். இறுதியில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போதுதான் தெரியும் கைதான இளைஞர்கள் நிரபராதிகள் என்று!
விடுதலை செய்யப்பட்ட பாவப்பட்ட அந்த இளைஞர்கள் தங்களின் இளமையை, குடும்பத்தை, வாழ்க்கையை இழந்த நிலையில் சிறையை விட்டு வெளிவரும் போது, ஊடகங்களால் ஹஅறிவ+ட்டப் பட்ட| இச் சமுதாயம் அவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து, தப்பித்து வெளிவந்துள்ள பயங்கரவாதி களாகவே பார்க்கிறது. நீதிமன்றங்களால் நிரபராதி கள் என அறிவிக்கப்பட்டாலும் இச்சமுதாயம் அவர்களை புறக்கணித்து, தனிமைப்படுத்துவதன் மூலம் கழுவேற்றிக் கொன்று விடுகிறது.
உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் போல் இந்திய நாட்டை உலுக்கியது 26-11 மும்பை தாக்குதல். இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு, தாக்குதல் இலக்குகளை வரைபடங்களாக தந்துதவி செய்ததாக பஹீம் அன்சாரி மற்றும் சலாவுத்தீன் அஹமது அகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் போலீஸ் தரப்பில் காட்ட இயலவில்லை. நீதிமன்றம் அந்த இருவரையும் நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கேள்விக்குரியதாக்கிய மிகக் கொடூரமான மும்பை தாக்குதல் வழக்கில் கூட பாரபட்சமற்ற புலன் விசாரணை நடத்த போலீசால் இயலவில்லை. காரணம் ஏற்கனவே அவர்களின் மூளைக்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கும் ஹமுஸ்லிம் வெறுப்புணர்வு|.
டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 14 வருட காலம் சிறையில் வாடிய கஷ்மீரை சேர்ந்த சகோதரர்கள் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மும்பை வழக்கின் தீர்ப்பு சொல்லப்பட்ட நான்காம் நாள் நடந்தது.
கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது செய்யப்பட்டிருந்த மவுலானா குலாம் யஹியா என்பவர் 4 வருடங்கள் சிறையில் வாடிய பின்னர் கடந்த சனவரி மாதம் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். டேராடூன் இந்திய ராணுவ அகாதமியை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இப்திகார் முல்லிக் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த சனவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். இப்திகார் முல்லிக் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். டேராடூனிலே பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருந்த மாணவன். லஷ்கர் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக் கப்பட்டதால் படிப்பை இழந்து, வாழ்க்கையை இழந்து, நிரபராதி என நீதிமன்றம் கூறினாலும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இன்று சிறை மீண்டிருக்கிறார்.
2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என கூறப்பட்டது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணம் எனக் கூறி கைது செய்யப்பட்ட 21 முஸ்லிம் இளைஞர்கள் ஏறக்குறைய இரண்டு வருட சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதிகன் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்தியது காவி பயங்கரவாதிகள்தான்| என சி.பி.ஐ. தற்போது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதல்கள் நடந்த உடனேயே வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹஹியுஜி| - என்ற அமைப்பு தாக்குதலை நடத்தியதாக கூறி அஜ்மீரில் சில வங்கதேசத்தை சேர்ந்தவர் களை போலீஸ் கைது செய்தது. மராட்டிய, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து சில மவுலானாக்களையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், அவர்கள் அனைவருமே தற்போது நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2006 மலேகான் குண்டுவெடிப்பு 2007 ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல் அஜ்மீர் குண்டுவெடிப்பு இவை அனைத்திலுமே தாக்குதல் நடந்த உடனேயே சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் போலீசாரால் சொல்லப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அனைத்து ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதம்|,ஜிகாத்|, புனிதப்போர்|, ஹஇந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று| ஆகியவை குறித்து பட்டிமன்றங்களை நடத்தின.
முஸ்லிம்களின் வணக்கத் தலங்களை முஸ்லிம்களே தாக்க முடியுமா என்ற சந்தேகங்களை போக்கும் வகையில் வஹாபி, சூஃபி இடையிலான முரண்பாடுகளை முன்னிறுத்தினர்.
ஹைதராபாத் இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு நிஜாமுதீன் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்பது முஸ்லிம்களின் நோக்கம் என பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், இன்று இத் தாக்கு தல்களை முன்னின்று நடத்தியது ஹகாவி பயங்கர வாதிகளே| என கண்டறியப்பட்டுள்ளது. 2006- ஏப்ரல் மாதம் நடந்த நான்டெட் குண்டு வெடிப்பு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவரின் வீட்டுக்குள் நடந்தது. புலன் விசாரணையில் அது பஜ்ரங்தள் தொடர்பானவர்கள் நடத்தியது என தெரிய வந்தது. அவர்கள்தான் பர்பானி, ஜல்னா மற்றும் ப+ர்ணா பள்ளிவாசல்களின் வெளியே நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என கண்டறியப்பட்டது. தென்காசியிலும், கான்ப+ரிலும் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு உள்ளதை நாமே அறியும். ஹஅபினவ் பாரத்| என்ற ஹகாவி பயங்கர வாத அமைப்பு| நடத்திய செயல்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தியுள்ளார். சனாதன சனஸ்தா| என்ற காவி பயங்கரவாத அமைப்பு கோவா, தானே மற்றும் பான்வெல் குண்டுவெடிப்பு களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திலும் இந்த காவி பயங்கரவாதிகள்| ஊடுருவி ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதம் மராட்டிய மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், புனே குண்டுவெடிப்புக்கு இந்து அமைப்பு களே காரணம் என ஏ.டி.எஸ். (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) தலைவர் கூறுவாரேயானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்| என்றார். அதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ். தலைவர் கே.பி. ரகுவன்ஷி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பதவியிலே தற்போது குற்றப்பிரிவு தலைவரும், மும்பை 26ஃ11 தாக்குதல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியுமான ராகேஷ் மரியா அமர்த் தப்பட்டுள்ளார். இந்த ராகேஷ் மரியா என்பவர் திருட்டு வழக்கில் கைதான முஸ்லிம் ஒருவரை சோட்டா ஷகில் குழுவைச் சேர்ந்தவர் என்றும், மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர்களை கொல்ல அனுப்பப்பட்டவர் என்றும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி அதனால் மும்பை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளா னவர். இவர் தான் இனி புனே மலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளிலே புலன் விசாரணை நடத்துவார்.
முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களாக சித்தரித்து அவர்களின் மேல் தொடர்ச்சியாக பல்வேறு பொய் வழக்குகளை போடுவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயர் கெடுவதோடு மட்டுமல்லாமல் பிற சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுடனான முஸ்லிம்களின் உறவும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்பாவி மக்களைக் கொல்லும் கொலைகாரர்களாக இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர். சிறைகளில் இவர்கள் அடைக்கப்படும் போது அங்குள்ள மாற்று சமூகத்தைச் சார்ந்த கொலைக் குற்றவாளிகள் கூட இவர்களை ஒதுக்கியே வைக்கின்றனர். இவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும் கூட சமூகம் இவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களை மட்டுமல்ல இவர்கள் சார்ந்த சமுதாயத்தையே சந்தேகத்துடன் பார்க்கிறது. இவையெல்லாம் ஊடகங்களின் முழு ஆதரவுடனும், ஒத்துழைப்புடனே நடக்கிறது.
காவிமயமாதல்| என்பது சமூகப் புற்றுநோய். மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நாலாந்தர வியாபார ஊடகங்கள் இந் நோய்க் கிருமிகளை மிக லாவகமாகவும், வேகமாகவும் பரப்புகின்றன. போலீசும், அதிகாரவர்க்கமும் அதற்கு துணை நிற்கின்றன. முதல் பத்தியில் நான் குறிப்பிட்டுள்ள ஹிந்து| நாளிதழின் தலைப்பு செய்தியே இதற்கு சான்று.
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்

Subscribe to:
Posts (Atom)