Showing posts with label தேசிய பிரதிநிதி. Show all posts
Showing posts with label தேசிய பிரதிநிதி. Show all posts

Sunday, January 10, 2010

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ



அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.

ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.

பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.

தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.

தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.

1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.

அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..

அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!

Thursday, January 7, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தருவோர் கவனத்திற்கு....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தருவோர் கவனத்திற்கு....


2010 ஜனவரி 15, 16 தேதிகளில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ரூ.750ஃ- கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளவர் களுக்கான பயண விவரங்கள்-

1) பெங்களூரு மெயில் - ரயில் எண். 2657.

புறப்படும் இடம் சென்னை சென்ட்ரல்

புறப்படும் நேரம் 14-01-2010 இரவு 11.15 மணி

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 4.35 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலி ருந்து பதிவு செய்தோர். இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி -

ப+வை முஸ்தபா - 9884227040

2) மைசூர் எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6231.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

மயிலாடுதுறை 14-ம் தேதி மாலை 5.55 மணி.

கும்பகோணம் - மாலை 6.23

தஞ்சாவ+ர் - மாலை 7.10

திருச்சி - இரவு 8.30

கரூர் - இரவு 10.05

ஈரோடு - இரவு 11.35

சேலம் - இரவு 12.40

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 5.05 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள். இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி -

வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது - 9443650790

விருத்தாசலம் சுக்கூர் - 9943375559

3) மைசூர் எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6731.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

தூத்துக்குடி 14-ம் தேதி மாலை 4.35 மணி.

கோவில்பட்டி- மாலை 5.47

விருதுநகர் - மாலை 6.45

மதுரை - மாலை 7.45

திண்டுக்கல் - இரவு 9.20 மணி

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 5.38 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள்.

இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி - வாவு சம்சுதீன் - 9965424518

மதுரை இக்பால் - 9894409381

4) பெங்களூரு எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6525.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

கோவை 14-ம் தேதி இரவு 10.40 மணி

திருப்ப+ர் - இரவு 11.29

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 6.20 மணி

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் கோவை, திருப்ப+ர் மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள்.

இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய

தொலைபேசி - கோவை பஷீர் - 9894147047

தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலிருந்து தனி வாகனங்களில் வருகின்றவர்களும் பெங்களுர் கன்டோன்மென்ட் வருகை தந்து சாதாப் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு அலுவலகத்தில் 15-ம் தேதி காலை 8 மணி முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ரூ.300 செலுத்தியவர்களுக்கு அடையாள பேட்ஜ் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து செல்கின்றவர்கள் மாநாட்டில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள் - வாணியம்பாடி நயீம் - 081472 97795

வாணிம்பாடி இக்பால் - 08147310715

மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் தங்க வசதியும், உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடல் மற்றும் தங்குமிடம் -

ஹசாதாப் மஹால்|.

இது பெங்களூரு நேதாஜி ரோடு வழியாக அம்பேத்கர் ரோட்டில் (டேனரி ரோடு) அமைந் துள்ளது)

பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆட்டோ கட்டணம் ரூ.20ஃ-