Sunday, March 29, 2009

ஓய்ந்தது ஆயங்குடியின் சங்கநாதம்

ஓய்ந்தது ஆயங்குடியின் சங்கநாதம்

ஆயங்குடியின் முதுபெரும் தலைவரும்,ஆசிரியருமான ஆ.லு.அப்துல் குத்தூஸ் ஆசிரியர் அவர்கள் 28.03.2009 காலை 8.00மணி அளவில் தாருள் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.ஆயங்குடியின் கல்வி,மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பல துறைகளில் ஊரின் முன்னேற்றத்திற்காக தன்னலம் பாராமல் அயராது பாடுபட்ட ஆசிரியர் அவர்கள்,காயிதேமில்லத்,அப்துல் சமத்,அப்துல் லதீப் ஆகிய சமுதாய தலைவர்களோடு இனைந்து சமுதாயபணியாற்றியிருக்கிறார்கள்,ஊர் முத்தவல்லியாகவும்,இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக்,தேசியலீக் ஆகிய கட்சிகளில் மாவட்ட மற்றும் மாநில பொருப்புகளையும் பல முறை வகுத்துள்ளார்கள்.அவர்களின் மறுமை வெற்றிக்காக ஏக இறைவனை பிறார்திப்போம்.

Varun’s Speech

Varun’s Speech
After examining the CD containing Varun Gandhi’s election inflammatory speeches, the Election Commission is right in censuring Varun and asking the BJP to drop him as its Lok Sabha candidate. Its action may be unprecedented but it is time it was empowered to rein in politicians who make venomous speeches. Varun Gandhi’s hate speech is not just unfortunate but obnoxious. The very idea of dividing people on communal lines for electoral gains is selfish. Communal harmony is so fragile that politicians have exploited it for ages. It is not clear whether Varun’s communal remarks were a publicity stunt or a true expression of his feelings. Any action or remark that hurts the feelings of people belonging to a particular community is against the letter and spirit of the Constitution. Dividing the community on the basis of caste and creed is no less dangerous than disrupting communal harmony. His inflammatory comments are antithetical to his great grandfather’s vision of a liberal and secular India . His speech raised serious doubts in the minds of the people about his fitness to be in politics. Civil society and the media have done well to expose him, thus preventing him from making more such speeches threatening our pluralist society. The sangh parivar is back to its old ways. It disowned Nathuram Godse after he assassinated Mahatma Gandhi. After presiding over the demolition of the Babri Masjid, BJP leader L.K. Advani described December 6 as the saddest day of his life. Now the BJP has dissociated itself from Varun Gandhi’s hate speech but he continues to be its candidate for the Pilibhit Lok Sabha seat. Varun’s attitude has not only tarnished the image of the BJP but has also sent a message to the masses that the party has not shed its saffron robes. After demolishing the Babri Masjid structure they have now diverted their full might to tear-apart the secular fabric of India . One wonders what is in store for our nation where young leaders who should set an example in the coming generations are bent on dividing our country on communal lines. If the election campaign of the Varun Gandhi can be so venomous, one wonders what his conduct will be like if he is elected. It is for us, the voters, to be wary of them and use our franchise to ensure that no fanatical politician gets elected. This country is ours and it is owned by its citizen’s not a single sect or community. I request to secular citizens of India , please don't vote these types of communal persons.

Tuesday, March 24, 2009

மீலாது விழா நடத்திய முஸ்லிம் லீக் மகளிர் அணி

ஆம்பூர், மார்ச் 23: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் மீலாது விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கட்சியின் வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவி சர்வத் இலியாஸ் தலைமை வகித்தார். நகரமன்ற உறுப்பினர்கள் சாபிரா ஜலால், சிராஜின்னிசா, ஜரினாபேகம், தாரா ஜபீன், நஸ்ரின் கவுசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யாஸ்மின் பேகம், முஹம்மதி பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான கே. இக்பால் அஹமத், இம்தியாஸ் அஹமத், ரியாஸ் அஹமத், அக்பர் பாஷா, பஹீம் அஹமத், நதீம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Monday, March 23, 2009

SIRAJUL MILLATH FORUM HONG KONG

23/03/2009

Dear Brothers / Sisters,

Assalamu Alaikum.

Al-Hamdulillah.

Please find the below link on the latest news on our TAMIL NADU INDIAN UNION MUSLIM LEAGUE official website. You can browse this website daily for updates..

http://www.muslimleaguetn.com/news.asp
May Allah Guide all of us in HIS Right Path and Shower HIS Blessings towards us & Give all of us the Shafaath of HIS Habeeb and our Beloved Prophet Mohamed (Peace Be Upon HIM), Ameen.

--
SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

millathforum@gmail.com

Sunday, March 22, 2009

சகோ ஜவாஹிருல்லாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

சகோ ஜவாஹிருல்லாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

http://www.muslimleaguetn.com/news.asp

முஸ்லிம் லீக் அழிவின் விழிம்பிலே நிற்பதாக திருவாய் மலர்ந்துள்ளார் மமுகவின் அறிவிக்கப்படாத தலைவர் ஜவாஹிருல்லாஹ். இன்றைய தின மலரிலே இச்செய்தி வெளிவந்துள்ளது.

ஏகத்துவப் பாசறையின் முன்னாள் நண்பர்கள் அரசியல் வாதிகளான பிறகு, இப்போது ஜோசியக் காரர்களாகவும் புதுப் பரிணாமம் எடுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அரசியலுக்கு வந்த பிறகு, இவர்கள் இப்படியெல்லாம் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருப்பது ஆச்சரியம் இல்லை தான்.

ஒன்றை மட்டும் இந்த சந்தர்ப்பவாதிகள் இப்போது உணர்ந்திருப்பது நமக்குத் தெரிகின்றது.

முஸ்லிம் லீக் உள்ள வரை தங்கள் உள்ளடி வேலைகள் சமுதாயத்திலும்,அரசியல் அரங்கிலும் செல்லாது என்பது தான் அது.

கலைஞர் அரசு கொடுத்துள்ள சிவப்பு விளக்கு ஊர்தியிலே தனது பொதுச் செயலாளர் பவனி வரும் போது, ஜெயல்லிதாவோடும் நாங்கள் கூட்டணி பேரம் பேசுவோம் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் ஒரு அரசியல் வியாபாரி, முஸ்லிம் லீகின் எதிர் காலம் பற்றி கணிப்பதற்கு யோக்கியதையில்லை. ஆயிரத்து நூறாண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியாக முஸ்லிம் லீகைப் பார்ப்பதால் தான் சங்பரிவாரங்களும், பிஜேபியும் முஸ்லிம் லீகை அழிப்பதற்கு கங்கணம் கட்டி வேலை செய்து வருகின்றார்கள்.

அத்தகையோரின் வயிற்றில் பால் வார்க்கும் வேலையை இவர்களும் செய்ய ஆரம்பித்துள்ளதை சமுதாயம் உற்று கவனிக்க ஆரம்பித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னால் இவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று ராமகோபாலன் அறிக்கை வெளியிட்ட போது, அதற்கு கடும் கண்டனத்தை முஸ்லிம் லீக் பதிவு செய்தது.

அரசியல் மாச்சரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ,சமுதாய நலன் கருதி செயல்படும் இயக்கம் முஸ்லிம் லீக். சமுதாயத் தாய்ச்சபையும் அது தான். அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை செல்வதற்கு முஸ்லிம் லீக் துணைநின்றது.

இதன் மூலம் எத்தகைய பலன் நாம் பெற்றோம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை வெளிச்சம் போட்டு , வியாபாரம் செய்யும் அவசியமும் நமக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சுயமாகத் தீர்வு சொல்ல முடியாதோர், முஸ்லிம் லீகின் தலைவர்கள் தந்த தீர்வுகளை, ஊரெல்லாம் தங்கள் உயரிய கண்டுபிடிப்பாக இரவல் அரசியலாக நடத்தி வருவது நாம் அறியாததல்ல.

முஸ்லிம் என்று சொல்வதற்கு முதுகெலும்பில்லாமல், இரவல் பெயர் சூட்டிக் கொண்டு வந்தால் மற்ற சமுதாய மக்களையும் நம் பக்கம் இழுத்து விடலாம் என்று கனாக்காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும் காட்டித் தந்த வழியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பீடு நடைபோடுகின்றது.

சமூக நல்லிணக்கம் குறித்தும், மனித நேயம் குறித்தும் பேசுவதற்கு ஒரு முஸ்லிமை விடத் தகுதி படைத்தவர் யாருமில்லை என்ற உறுதியான நம்பிக்கை நமக்கிருக்கின்றது.

தன்னை முஸ்லிம் என்று அழைத்துக் கொள்வதை விட அழகான சொல் எதுவுமில்லை என்ற அல் குர்ஆனின் அறை கூவலை முஸ்லிம் லீக் பாராளுமன்றமாக இருந்தாலும் எதிரொலிக்கும்.

ஐக்கிய நாட்டுச் சபையாக இருந்தாலும் நம் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் என்று தான் அறியப்படுள்ளார்கள்.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாமின் மார்க்கத்துச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் முஸ்லிம் லீகர்கள் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை.

அல்லாஹ்வும், அவனின் திருத் தூதரும் இட்ட அழகிய பெயரையே நம் அன்னையும் , தந்தையும் நமக்குத் தந்தனர்.

அப்பெயரிலேயே பிறந்தோம்.அல்லாஹ்வின் அளப்பெரும் பேரருளால் அத்திருநாமத்தாலேயே அழைக்கவும்படுகின்றோம்.அவனளவில் மீளும் போதும் இன்ஷா அல்லாஹ் அத்திருநாமத்துடனேயே செல்வோம்.

முஸ்லிம் என்றே முழங்குவோம். முஸ்லிம் லீக்கிலே அரசியல் அறப் பணி செய்வோம்.

இதயங்களை இணைப்போம் ! இந்தியாவை வல்லரசாக்குவோம் !!

இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

சட்டச் சிக்கல் வந்தால் சந்திப்போம்! சதிகளைச் சமராடுவோம்!! சமூக நீதி சமைப்போம் !!!

இரவல் பெயர் வாங்கி அரசியல் நடத்தும் அவல நிலைக்குச் செல்ல மாட்டோம்.

யா அல்லாஹ்! அத்தகைய இழிநிலையிலிருந்து எங்களைக் காப்பாயாக!!

முஸ்லிம் லீக்கின் அழிவில் தான் தங்கள் அரசியல் வாழ்வை நிலைப்படுத்தும் பரிதாப சூழ்நிலைக்கு சகோதரர் ஜவாஹிருல்லாஹ்வின் புது அரசியல் கட்சி தள்ளப்பட்டிருந்தால் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஹக்கு சுப்ஹானஹ{ தஆலா பல்வேறு சோதனைகளிலிருந்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றி, பவனி வரச் செய்துள்ளான்.

பண்டிதர்களிடத்திலிருந்தும், படேல்களிடத்திலிருந்தும் காப்பாற்றிய அல்லாஹ் தான் பதர்களிடத்திலிருந்தும் காப்பான் என்ற ஆழ்ந்த தக்வாவின் அடிப்படையிலே முஸ்லிம் லீகின் நெடும் பயணம் தொடர்கின்றது.

முஸ்லிம் லீக்கின் அழிவை எதிர்நோக்கி காத்திருப்போர் ஏமாற்றத்தின் விரக்தியிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களின் கட்சிகளைக் கலைத்து விட்டு , தாய்ச் சபையாம் முஸ்லிம் லீக்கிலே தங்களை இணைத்துக் கொண்டு சமுதாயப் பணியாற்ற தோள் கொடுக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். நல்லோர்களின் அவாவும் அதுவே!

ஏ. லியாக்கத் அலி பொதுச் செயலாளர்

முஹம்மது தாஹா இணைச் செயலாளர்

ஹமீது ரஹ்மான் இணைச் செயலாளர்

காயிதே மில்லத் பேரவை, யு. ஏ. இ.,

Sunday, March 15, 2009

முஸ்லிம் லீக் பாடகர் சீனி முஹம்மது

முஸ்லிம் லீக் பாடகர் சீனி முஹம்மது

http://www.muslimleaguetn.com/news.asp?id=693

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க பாடகராக முகவை எஸ்.ஏ. சீனி முஹம்மது திகழ்ந்து வருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்ட மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., முகவை சீனி முஹம்மது சேவையை பாராட்டி தனது ஒரு மாத பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் லீக் சார்பில் இசை நிகழ்ச்சிகள் முகவை சீனி முஹம்மதுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க மாவட்ட - நகர நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகவை எஸ்.ஏ. சீனி முஹம்மது
11-ஏ, பாம்பூரணி ரோடு, வெளிப்பட்டினம்,
இராமநாதபுரம் : 623 504
மொபைல் : 94431 - 12620
போன் : (04567) 223061

Friday, March 13, 2009

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தேரா தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் 13.03.2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி இறைவசனங்களை ஓதினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மண்டல மற்றும் உலமாக்கள், உமராக்கள் மாநாடு, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரித்தார்.

கூட்டத்தில் பொருளாளர் ராஜகிரி அப்துல் கத்தீம், கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ராமநாதபுரம் தயூப் அலி, ராமநாதபுரம் பரக்கத் அலி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.