Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts

Tuesday, May 19, 2009

முத்துப்பேட்டை தந்த முத்து

முத்துப்பேட்டை தந்த முத்து
முஸ்லிம் லீக் பெற்றிருக்கும் சொத்து
அமீரக காயிதே மில்லத் பேரவையின் வித்து

விளம்பரத்தின் வெளிச்சமின்றி
ஒளிந்திருந்த நிலாவே
உன்னை உயர்த்திவிட்டது ஆம்!

இணைப்பால் அல்ல பிறப்பால்
முஸ்லிம் லீகன் என்றாயே
அப்பழுகற்ற உன் தாய்ச் சபை வெறி
உயர்த்தி விட்டது உன்னை
முஸ்லிம் லீகனின் நெஞ்சங்களில்
முதல்வராக காட்சியளிக்கிறாய்
ஆம்!இருக்க மாட்டாயா?
சிராஜுல் மில்லத்தின் கரத்தால்
சிறப்பு விருது பெற்ற சிற்பியே
முனீருல் மில்லத்தின் முழு மனதே
உன்னைத் தெரிய வேண்டி
நின்றோர் சிலர்! இன்று
அறிந்து கொண்டோர் பலர்

ஆக்கப்பூர்வமான பணிகளை
அசத்தலாக செய்யப் போகும்
உன் பணிகளால் தாய்ச் சபை
மேலும் வளரும்,மிளிரும்

அடக்கத்தின் உறவிடமே
அனைத்துப் புகழும் அல்லாஹூக்குத்தான்
அருகதையுள்ள உன்னை அரியனை
ஏற வைத்த ஏக வல்லவனுக்கே!
"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

உங்கள் தலமையில் மிளிரும்
ஐக்கிய அரபு அமீரக
காயிதே மில்லத் பேரவையின்
கவிப்பா இது!
இஹ்லாசோடு சமர்ப்பிக்கின்றோம்
இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வீராக!!!

-இப்னு ஷஃபீக்-