Syed Ibrahim
dateSat, Nov 21, 2009 at 11:54 AM
Dhua salam thambi.
It is heartening to note, your sincere efforts have paid dividents and many brothers and sisters had the opportunity for Hajj this year. May Allah SWT Bless all your efforts -Himanasyed
முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கைக்கு வெற்றி மத்திய ஹஜ் கமிட்டியிடம் அப்துர் ரஹ்மான் எம்.பி. போராடி அனுமதி பெற்றார்
ஹஜ் புனிதப் பயணத் திற்கு விண்ணப்பித்து கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்ட புனிதப் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மேற்கொண்ட நேரடி நடவடிக்கையால் நாளை புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். புனித ஹஜ் பயணம் செல்வதற்கு இந்தியாவிலி ருந்து லட்சக்கணக்கானவர் கள் விண்ணப்பித்தும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 34 லட்சத்து 78 ஆயிரத்து 40 பேர் மட்டுமே முஸ்லிம் களின் எண்ணிக்கை என கணக்கிட்டு அவர்களில் 1,319-துக்கு ஒருவர் வீதம் என கோட்டா நிர்ணயிக் கப்பட்டு, 2612 பேர் மட் டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டனர். மற்ற மாநிலங்க ளிலிருந்து கிடைத்த இடத்தையும் சேர்த்து அரசின் மூலம் சுமார் 4 ஆயிரம் பேர் இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் செல்கின்றனர்.
இதுதவிர, மத்திய அரசு தன்வசம் வைத்துள்ள கோட்டாவில் இருந்து வாய்ப்பு பெறுவதற்கு புனிதப்பயணிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் ஏராளமான முறை கேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றி அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த ஆண்டு முதல் ஹஜ் பயணத்தில் எத்தகைய குற்றச்சாட் டிற்கும் இடமில்லாத வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்
இதனிடையே, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களில் பலர் இந்த கோட்டாவில் இடம் இருப்பதை அறிந்து அதில் வாய்ப்பு பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையை அணுகி னர். இவர்களுக்கு புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானை கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேரடியாக சந்தித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் செல்ல அனுமதி பெற்று வந்தார்.
தாமதமாக கிடைத்தா லும் இந்த வாய்ப்பு வீணாகி விடக்கூடாது என உணர்ந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை இதற்கான முயற்சிகளை முஸ்லிம் லீக் அலுவலகத்திலிருந்தே செய்து விசா பெறுவதற்காக மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் சத்தாரை நேரடியாக மும்பைக்கு அனுப்பி வைத்தது. அவர் கடுiமான முயற்சி மேற் கொண்டும் மத்திய ஹஜ் கமிட்டி இந்தப் பயணி களின் புனிதப் பயணத் துக்கு அனுமதி வழங்கவில்லை.
மும்பையில் அப்துர் ரஹ்மான் எம்.பி.,
இதையடுத்து எம். அப்துர் ரஹ்மான் மும்பை விரைந்து சென்றார். மத்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது உவைஸியை சந்தித்துப் பேசினார். காலம் கடந்து விட்டதால் விசா நடைமுறைகள் செய்வதற்கோ, விமான ஏற்பாடு செய்வதற்கோ வாய்ப்பு இல்லை என சொல்லி அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
நேரடியாக களம் இறங்கிய எம். அப்துர் ரஹ்மான் இந்தியாவிற்கான சவ+தி அரேபிய நாட்டின் தூதர் மற்றும் துணைத்தூதர் ஆகியோருடன் நேரடியாக பேசி விசா வழங்குவதற்கான அனுமதியை பெற்றார்.
பின்னர் மும்பை விமான நிலைய அதிகாரி களுடன் நேரடியாக பேசி விமானத்திற்கான அனு மதியைப் பெற்றுக் கொடுத்து அதன் பின்னர், புனிதப் பயணிகளின் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யு மாறு மத்திய ஹஜ் கமிட்டி யின் தலைமை நிர்வாக அதிகாரியை வலியுறுத்தினார்.
இந்த அதிரடி நடவ டிக்கைகளை தொடர்ந்து ஹஜ் புனிதப்பயணிகள் 49 பேர் பயணம் செய்வதற் கான வாய்ப்பு கிடைத்து அவர்கள் அனைவரும் வரும் 20-ம் தேதி வெள்ளிக் கிழமை 3.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மும்பை சென்று இரவு 9.35 மணிக்கு மும்பையிலிருந்து ஜித்தா புறப்படுகின்றனர்.
வாழ்த்தும் - வரவேற்பும்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இந்த முயற்சிக்கு புனித ஹஜ் பயணிகளும், அவர்கள் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும், அதன் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்தப் பணிகளுக்காக மும்பை வந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானுக்கு மும்பையி லுள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீசில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹஜ் கமிட்டியின் நிர்வாகிகள் எஸ்.கே. அமீன், குல்ஸார் அஹமது, இனாயத்துல்லாஹ் உள் ளிட்டோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு மும்பை வாழ் கேரள முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஜக்கரியா வீதியில் உள்ள அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் மாணிகோட் உன்னி ஹாஜி, செயலாளர் எம். எம்.கே. உமரி ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச் சியை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியச் செயலாளர் முஹம்மது இஸ்மாயில் பனாத்வாலா, மும்பை முஸ்லிம் லீக் செயலாளர் சி.எச். அப்துர் ரஹ்மான், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார் ஆகியோரும் பங்கேற்றனர்.
மும்பை வாழ் காயல்வாசிகள் வரவேற்பு
மும்பை பென்டிபஜாரில் உள்ள ஹோட்டல் ஷாலிமாரில் மும்பைவாழ் காயல்வாசிகள் சார்பில் அப்துர் ரஹ்மான் எம்.பி .க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எச்.எம். முஹம்மது கியாது தலைமை வகித்தார். மவ்லவி முஹம்மது கல்ஜி ஆலிம் கிராஅத் ஓதினார். எம்.எல். சாகுல் ஹமீது எஸ்.கே. வரவேற்றுப் பேசினார்.
இந் நிகழ்ச்சியில் பேசிய எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அவசியத்தை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு சமுதாயப் பிரச்சினையிலும் அது எப்படி அணுகுகிறது? தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அதை வழிநடத்துகின்ற விதத்தையும் எடுத்துக்கூறி தாய்ச்சபையையை பலப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வி.ஐ. புகாரி, ஓரியண்ட் பெயிண்ட் ரபீக், பல்லாக் கம்பெனி தய்ய+ப், மன்சூர், ஸ்டார் கம்பெனி எம்.ஏ. மீரா சாஹிப், எம்.எம். புகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் எம்.ஏ. சத்தார் நன்றி தெரிவித்துப் பேசினார். வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம்மது ஹனீப் துஆ ஓதினார்.