Saturday, September 5, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - அமைப்புச் செயலாளர் - நெல்லை மஜீத் ஆகியோருக்கு ...........

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - அமைப்புச் செயலாளர் - நெல்லை மஜீத் ஆகியோருக்கு ரியாதில் உற்சாக வரவேற்பு
காயிதெ மில்லத் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

ரியாத், டிச.1-
சவ+தி அரேபியா சென் றுள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோருக்கு தலைநகர் ரியாதில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரியாத் காயிதெ மில்லத் பேரவை, ரியாத் கோழிக் கோடு நகர கே.எம்.சி.சி., காயல் பைத்துல்மால் உள் ளிட்ட அமைப்புகள் நடத் திய நிகழ்ச்சிகளில் அவர் கள் பங்கேற்றனர்.
சவ+தி அரேபியா ரியாத் நகரில் உள்ள காயிதெ மில்லத் பேரவை அழைப் பின் பேரில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் சவ+தி சென் றுள்ளனர்.
விமான நிலையத்தில்
வரவேற்பு
28-ம் தேதி சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்து சென்னை விமான நிலையத் திலிருந்து புறப்பட்ட அவர் கள் இருவரும் அன்றிரவு ரியாத் சென்றடைந்தனர். விமான நிலையத்தில் காயிதெ மில்லத் பேரவை யின் நிர்வாகிகள் கடைய நல்லூர் ஹிஸ்புல்லா, லால் பேட்டை நாசர், பண் ருட்டி ஜகரிய்யா, உளுந் தூர்பேட்டை பஷீர், ராமேஸ்வரம் நஜ்முதீன், கடையநல்லூர் முஹம்மது அலி, சாகுல் ஹமீது, செய் யது மஸ்ஊது, கேரள முஸ்லிம் கலாச்சார மைய நிர்வாகிகளான அர்ஷ{ல் அஹமது, ஷாஜஹான், ஜலீல் உள்ளிட்டோர் வர வேற்றனர்.
29-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை மஃரிபு தொழு கைக்குப் பின் ரியாதில் உள்ள காயல்பட்டினம் பைத்துல்மால் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. எஸ்.ஏ.கே. மஹ்மூது சுல்தான் இல்லத் தில் நடை பெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஹாபிழ் செய்து அஹமது ஆலிம் கிராஅத் ஓதினார். எம்.இ. எல். நுஸ்கி வரவேற்று பேசினார்.
பாராட்டுரை வழங்கிய என்.டி. சதகத்துல்லா, பொதுச் செய லாளர் பதவி யினை கே.ஏ. எம். முஹம் மது அப+பக்கருக்கு வழங் கிய தாய்ச்சபை நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்த தோடு வரலாற்றுப் பாரம்ப ரியம் மிக்க காயல்பட்டி னம் வரலாற்றில் இவரது உழைப்பும், உயர்ந்த பொறுப்பும் பதிவாகும் என குறிப்பிட்டார். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
அதனைத் தொடர்ந்து சவ+தி ரியாதில் உள்ள கேரள முஸ்லிம் கலாச்சார கூட்டத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட் டது.
ஓட்டல் ஹாஃப் மூன் ஆடிட்டோரியத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.சி. கள்ளிக் கோட்டை கிளை தலைவர் செய்யது அப்துல் ரஹ் மான் பாகவி தங்ஙள் தலைமையேற்றார். தாமரைச்சேரி பஷீர் கிராஅத் ஓதினார். செயலா ளர் சுக்கூர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அர்சுல் அஹமத் துவக்கவு ரையாற்றினார். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்பரையாற்றினர்.
செய்தியாளர்களிடம்
சந்திப்பு
30-ம் தேதி திங்கட் கிழமை பகல் 1.30 மணிக்கு ஷிபா அல்-ஜஸீரா மருத் துவமனை ஆடிட்டோரி யத்தில் செய்தியாளர் சந் திப்பு நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+ பக்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அன்று மஃரிபு தொழு கைக்குப் பின் ஓட்டல் ஹாஃப் மூன் ஆடிட்டோ ரியத்தில் சவுதி காயிதெ மில்லத் பேரவை மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் இணைந்து நடத் திய கருத்தாய்வு அரங்கம் நடைபெற்றது.
தலைவர் ஹிஸ்புல்லா தலைமை தாங்கினார். ஆடிட்டர் டி.எம். சாகுல் ஹமீது வரவேற்று பேசி னார். பொருளாளர் காயல் என்.டி. சதக்கத்துல்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மவ்லவி ஜாபர் அலி மன்பஈ, எஸ்.கே. அப்துர் ரஹ்மான், டி.எம். ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யது அஷரப் தங்ஙள், வயங்காட்டு அஷ்ரஃப் அர்சுல் அஹமது, எம்.இ. எல். நுஸ்கி, பொன்மலா அப்துர் ரஹ்மான், குன்னு மல் கோயா, வி.கே. முஹம் மது, அல்கஸீம் காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் வி.ஏ.எம். இக்பால், எஸ். ஹபீபுல்லாஹ், எம்.ஐ. அஹமது மீராதம்பி ஃபைசல், ரியாத் சனாயா காயிதெ மில்லத் பேரவை அப்துல் சுப்ஹான், டி.எம். ஷாகுல் ஹமீது, திருப்ப+ர் அப்துல் சத்தார், தென்காசி காதர் மைதீன், ஒருங்கி ணைப்பாளர் புதுக் கோட்டை யாகூப், காயல் எம்எம். ஹாஜா நவாஸ் ஆகியோர் கருத் துரை வழங்கினர். ரியாத் காயிதெ மில்லத் பேரவை செயலா ளர் லால்பேட்டை முஹம் மது நாசர், செயலாளர் முஹம்மது அலி, விளக்க வுரையாற்றினர். துணைத் தலைவர் பண்ருட்டி சுக ரிய்யா நன்றி கூறினார்.
ரியாதில் உள்ள தமிழக முஸ்லிம்கள் இந்நிகழ்ச் சிக்கு வருகை தந்திருந்தனர். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.
இன்று புனித மக்கா, மதீனா சென்றுள்ள அவர் கள் ஜித்தாவில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 4-ம் தேதி சென்னை திரும் புகின்றனர்.